மின்கட்டணத்தை குறைக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!
.

புதிய மின்கட்டண திருத்தத்தை நாளை 16 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்துமாறு மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அதன்டி, 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 61 தொடக்கம் 90 அலகுகளுக்கு இடைப்பட்டு மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு கட்டணங்கள் 55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன், ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
மதஸ்தலங்களுக்கான மின்சார கட்டணங்களை 30 சதவீதம் குறைக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
0-30 அலகுகள் – குறைப்பு ரூ.8 – ரூ.6
31-60 அலகுகள்– குறைப்பு ரூ.20 – ரூ.9
0-60 அலகுகள் – குறைப்பு ரூ.25 – ரூ.15
61-90 அலகுகள் – குறைப்பு ரூ.30 – ரூ.18
91-120 அலகுகள் – குறைப்பு ரூ.50 – ரூ.30
121-180 அலகுகள் – குறைப்பு ரூ.50 – ரூ.42
180 அலகுகள்+ – குறைப்பு ரூ.75 – ரூ.65