Breaking News
‘நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி’: இலங்கையில் குழப்பமடைந்துள்ள மக்கள்
.

இலங்கைத் தீவின் பல முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களை அண்டிய பகுதிகளில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலான விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்களில் தேசியக் கொடி மற்றும் பல வர்ணங்களின் பின்னணியில் ‘நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி’ என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும், பல தேசிய செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த விளம்பரம் பகிரப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில தினங்களுக்குள் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள விசேட உரையை அடிப்படையாக கொண்டு இவ்வாறு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
என்றாலும், இந்த விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாத மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.