இலங்கையின் பொருளாதாரமும் தேசியப் பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன ; அமெரிக்க தூதுவர் ஜுலி சங்
ஒரு தீவு நாடாக, இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகின் மிகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு மிக்க பகுதிகளில் ஒன்றாக தொடர்கிறது. ஒரு தீவு நாடாக, இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக கடல்சார் வர்த்தக வழிகள் அமைந்துள்ளதால், இவற்றைப் பாதுகாப்பதன் மூலம், இலங்கை அதன் எதிர்காலத்தை பாதுகாக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
இலங்கையில் தனது மூன்று ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டேன், ஆனால் பயணம் இன்னும் முடிவடையவில்லை.
இலங்கையர்களில் கால் பகுதியினர் இன்னும் வறுமையில் வாழ்கின்றனர். எனவே நீண்ட காலமாகத் தேவைப்படும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இலங்கை நீண்ட கால வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதி செய்வதற்கு அவசியமான அடுத்த படியாகும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகின் மிகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு மிக்க பகுதிகளில் ஒன்றாக தொடர்கிறது.
ஒரு தீவு நாடாக, இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பும் தேசியப் பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, திறந்த, சுதந்திரமான மற்றும் அமைதியான இந்தோ-பசிபிக் பகுதியைப் பராமரிப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் முக்கியமான அமைவிடம் காரணமாக பிராந்தியத்தில் வர்த்தக வழிகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்வதற்கு கடல்சார் கள விழிப்புணர்வு அவசியமாகும்.
ஏனெனில் இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக கடல்சார் வர்த்தக வழிகள் அமைந்துள்ளன. இவற்றைப் பாதுகாப்பதன் மூலம், இலங்கை அதன் எதிர்காலத்தை பாதுகாக்கிறது.
கடல்சார் பாதுகாப்பு துறைமுகங்கள் அல்லது கடற்படை உள்கட்டமைப்பில் உள்ள அச்சுறுத்தல்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை.
கடற்கொள்ளை, கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட கடல்சார் களத்தில் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் என புதிய சவால்களுடன் விரிவடைகிறது.
இவேவேளை, இலங்கையின் விரிவான பிரத்தியேக பொருளாதார மண்டலம் தேசிய பொருளாதார பாதுகாப்பிற்கு இன்றியமையாததாகும்.
ஏனெனில் இது கடல் வளங்களால் நிறைந்துள்ளது. ஆனால் இது சட்டவிரோத மீன்பிடி த்தலுக்கான இலக்காகவும் அமைகிறது.
அமெரிக்கா இந்த முக்கியமான பிராந்தியத்தில் உறுதியான பங்காளியாக தொடர்ந்தும் இருக்கும். தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பாதுகாப்பிற்காக கடல்சார் கள விழிப்புணர்வு போன்ற துறைகளை மேம்படுத்துவோம்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியமும், பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியமும், உலகளாவிய வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஒருபோதும் இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை.
இன்று எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், பகிரப்பட்ட எதிர்காலம் பிரகாசமானது. அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய நமது பகிரப்பட்ட இலக்குகள் அடையக் கூடியவை என்பதை நினைவில் கொள்வோம் என்றார்.