Breaking News
மட்டக்களப்பில் சிறீலங்கா கூலிப்படையால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின்
ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல்

நடேசனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு; அஞ்சலி செலுத்திய ஊடகவியலாளர்கள்.
மட்டக்களப்பில் சிறீலங்கா கூலிப்படையால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல் இன்று (31) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
நடேசனின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மூத்த ஊடகவியாளர் சி.தில்லைநாதன் ஏற்றிவைக்க மலர் மாலையினை ஊடக இல்லத்தலைவர் மகாலிங்கம் அணிவித்தார்.
தொடர்ந்து வடமராட்சி ஊடக இல்லத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.