சலுகைகளை வழங்க முடியாமல் அரசாங்கம் புலம்புக்கிக்கொண்டிருக்கிறது
மக்களை எதிர்கொள்ள முடியாமலும் பதில் சொல்ல முடியாமலும் திணறிக் கொண்டிக்கிறது அரசாங்கம்.

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறியதற்கும், செய்தவைக்கும் இன்று என்ன கூறுகிறது, என்ன செய்கிறது என்பதையும் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சியில் இருந்தபோது சாமர்த்தியமாக கடலில் இருங்கி மீனவர்களை கொண்டு போராட்டம் நடத்தி எரிபொருள் மானியம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தவர்கள்.
இன்று ஆட்சிக்கு வந்த அதனை பெற்றுக் கொடுக்காது இருந்து வருகின்றனர். இதனால் மீனவர்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை இன்று அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஊழலும் மோசடியும் ஒழிக்கப்படும், எரிபொருள் விலைகள், மின்சாரக் கட்டணம் பாரிய வித்தியாசத்தில் குறைக்கப்பட்டு சலுகைகள் தரப்படும் என்று மேடைக்கு மேடை முழங்கினர். இன்னும் அந்தச் சலுகைகளை வழங்க முடியாமல் அரசாங்கம் புலம்புக்கிக்கொண்டிருக்கிறது.
மக்களை எதிர்கொள்ள முடியாமலும் பதில் சொல்ல முடியாமலும் திணறிக் கொண்டிக்கிறது. இன்று கடற்றொழில், விவசாயம் முடங்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரிசி, தேங்காய், பால் மா என பொருட்களின் விலைகள் அதிகரித்து, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள இவ்வேளையில், அரசாங்கம் பதில் சொல்லாமல் புலம்புகின்றது. நாய்கள் மீதும், குரங்குகள் மீதும் பழி சுமத்தி வருகின்றனர். இவ்வாறான முட்டாள்தனமான கதைகளை கூற வேண்டாம். 2/3 மக்கள் ஆணையை மக்கள் பெற்றுத் தந்தது இவ்வாறான பொறுப்பற்ற பதில்களை எதிர்பார்த்தல்ல என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சமூக ஒப்பந்தத்தின் மூலம் அரச அதிகாரம் வழங்கப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் ஊடாக மக்கள் தமது பிரச்சினைகளுக்கு விடைகளை எதிர்பார்த்தனர்.
ஆனால் அது கிடைக்கவில்லை. இன்று காட்டுச் சட்டமே அமுலில் காணப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு குறித்து பாடம் கற்பிக்க முற்பட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, இக்காலத்தில் இடம்பெறும் கொலைகள் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பில்லை என தெரிவித்துள்ளார். இது பொறுப்பற்ற பேச்சு என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (28) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.