ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாரும் இம்முறை தப்பிக்க முடியாது.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் நடைபெற்ற சண்டை சச்சரவுகள் இப்போது நடைபெறுவதில்லை.

ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாரும் இம்முறை தப்பிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. நாம் சரியான விடயத்தை முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் சட்டத்தில் இருந்த ஓட்டைகளை பாவித்து யாரும் தப்பித்தார்கள் என்றால் அது இனி வரும் காலங்களில் இடம்பெற முடியாது. என வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கான காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் நடைபெற்ற சண்டை சச்சரவுகள் இப்போது நடைபெறுவதில்லை. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் விவாதிப்பதற்கான நேரம் பாராளுமன்றத்தில் தாராளமாக இருக்கின்றது.
நாம் அந்த அரசியலை இதற்குள் கொண்டுவர தேவையில்லை நாங்கள் நம்புகின்றோம் எதிர்வரும் காலங்களில் நடைபெற இருக்கின்ற இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நாம் அனைத்து பிரதேச சபைகளையும் கைப்பற்றுவோம். இந்த சபைகள் ஊடாக எமது அபிவிருத்தி பணிகளை மிகவும் வேகமாக துரிதமாக எடுத்துச் செல்ல நாங்கள் முயல்கின்றோம்.
குற்றச்சாட்டுகளை முன்வைத்துதான் நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த விசாரணைகளின் அடிப்படையில்தான் கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில விசாரணைகளை அவதானித்தால் சிறிய குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன, சில விசாரணைகளை அவதானித்தால் நடுத்தரமான குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன, இன்னும் சில குற்றச்சாட்டுகளை பார்த்தால் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன, விசாரணைகளை மேற்கொள்கின்ற அந்தந்த நிறுவனங்கள், அமைப்புக்கள் அது தொடர்பான விடயங்களை மிகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களை எதிர்த்தரப்பினர் அரசியல் பழி வாங்கல் என யோசிக்கின்றார்கள். என்று சொன்னால் நாம் கூறுவதெல்லாம் எதிர்க்கட்சியினர் இதுவரை காலமும் அவர்கள் ஊழல்களில் ஈடுபட்டிருந்தால் அதனை அவர்களாகவே ஒப்புக்கொள்ள வேண்டுமாறு நாங்கள் கூறுகின்றோம். இல்லாவிட்டால் இனிவரும் காலங்களிலாவது எந்த ஒரு ஊழல் மோசடியிலும் ஈடுபட வேண்டாம் என நாங்கள் தெரிவிக்கின்றோம்.
கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் எந்தவித அரசியல் தடைகளும் இல்லை. நாங்கள் எந்தவித விசாரணைகளிலும் கைதிகளிலும் எதுவித தலையீடுகளையும் மேற்கொள்வதில்லை.
ஆனால் ஊழல் மோசடியில் ஈடுபட்டு படுகொலைகளில் ஈடுபட்டு ஆட் கடத்தல்களில் ஈடுபட்ட யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது அரசாங்கம் அந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. நாம் சரியான விடயத்தை முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் சட்டத்தில் இருந்த ஓட்டைகளை பாவித்து யாரும் தப்பித்தார்கள் என்றால் அது இனி வரும் காலங்களில் இடம்பெற முடியாது. இந்த ஊழல்வாதிகளுக்கு இந்த மோசடிக்காரர்களுக்கும் ஆட்கடத்த காரர்களுக்கும் படுகொலை செய்தவர்களுக்கும் வாக்களிப்பதற்கு மக்கள் இருக்கின்றார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தினால் அவர்கள் வாக்களிப்பதற்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.
மக்களுக்கு நாம் கூறிக் கொள்வதெல்லாம் தயவுசெய்து மீண்டும் அவ்வாறான குற்றவாளிகளுக்கு வாக்களிக்க வேண்டாம். மக்கள் மனதுகளை சரியான முறையில் தெளிவுபடுத்திக் கொண்டு மக்களுக்கான களம் சந்தர்ப்பத்தை எமது கட்சி வழங்கியிருக்கின்றது. ஆகவே தேசிய மக்கள் சக்தி உங்களுக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.