ஜனாதிபதி முய்சுவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது.. மாலைத்தீவில் பரபரப்பு
.

இந்நிலையில் முகமது முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் மூலம் பில்லி சூனியம் வைக்க முயன்றதாக அவரது கட்சியைச் சேர்த்த 2 அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலைதீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் சேர்ந்து ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு பில்லி சூனியம் வைக்க முயன்றதால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முகமது முய்சு மாலைதீவு தலைநகர் மாலேவில் மேயர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே நகர சபை உறுப்பினர்களாக ஷாம்னாஸ் சலீம் மற்றும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அவருடன் பணியாற்றிய நிலையில் தற்போது அவர்கள் இவ்வாறு செய்ததற்கான காரணம் தெரியவரவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் 7 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.