பத்தும்:- 31,03,2025 - கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்!
"அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்"

கனேடிய பொதுத்தேர்தல் களத்தில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள்
கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நான் தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியிலும் புதிய முகமாக தற்போதைய மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினர் ஜுவொனிற்றா நாதன் மார்க்கம் பிக்கரிங் - புரூக்ளின் தேர்தல் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர். கொன்சர்வேர்ட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடும் லையனல் லோகநாதன் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியிலும் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் மார்க்கம்-யுனியன்வில் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர்.
‘ரொடும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது!
பாதாள உலகக் கும்பல் தலைவரான ‘ரொடும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் திணைக்களஉயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.‘ரொடும்ப அமில’ என்ற நபர் கைது செய்யப்பட்டதை ரஷ்ய அரசாங்கம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்தஅதிகாரி கூறியுள்ளார்.
"அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்" உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர்உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இருப்பினும், அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில், "அம்மா என்னை மன்னித்துவிடுங்கள், நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்... நான் எப்போதும்உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்..." என்று எழுதப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.