Breaking News
யார் இந்த சீதாலட்சுமி? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு...
.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி என்பவர் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 14-ஆம் தேதி காலமானார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2 முறையும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், இம்முறை ஆளும் திமுக நேரடியாக களமிறங்குகிறது.
இதையடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது எனக்கூறி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுகவும் தேமுதிகவும் அறிவித்தன. இதே காரணத்தைக் கூறிதான் கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அவ்விரு கட்சிகளும் புறக்கணித்தன. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.