Breaking News
இந்திய பிரதமர் ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்
,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் ஸ்திரத்தன்மை காரணமாக அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவதாகவும் தெரிவித்தார்.