ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தில் பாய்ந்த கார் ; 30 பேர் காயம்
,

ஜேர்மனியின் மியுனிச் நகரில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பொதுமக்கள் மீது காரை மோதி மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிற்கு பாதுகாப்பளித்துக்கொண்டிருந்த பொலிஸ்காரர்களை நோக்கி சென்ற வெள்ளை கார் பின்னர் வேகமாக சென்று பொதுமக்கள் மீது மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பில் 24வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கபப்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மாநாட்டிற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதி உட்பட முக்கிய தலைவர்கள் வருகைதருவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலை 24 வயதான ஆப்கானிஸ்தான் ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவர் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.