பலதும் பத்தும் :- 06.05.2025 -339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவுகள்.
பருத்தித்துறை கடற்கரையில் இளம் பெண்!

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவுகள்.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (06) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338 ஆகும், மேலும் 25 நிருவாக மாவட்டங்களில் 4877 உள்ளூராட்சி பிரிவுகளில் தேர்தல் நடைபெறும். அத்துடன், 5783 நிலையங்களில்வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தலில் 8287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
ஹோ சி மின் கல்லறை மற்றும் போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்அநுர.
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) முற்பகல்ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி மின் நினைவிடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, சுதந்திரப்போராட்டத் தலைவரும், சுதந்திர வியட்நாமின் முதல் ஜனாதிபதியுமான ஹோ சி மின் இன் அஸ்தி அடக்கம்செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜிதஹேரத்தும் கலந்து கொண்டார்.
சுங்கக் கட்டளைச் சட்டம்!
சுங்கக் கட்டளைச் சட்டத்தை மீறியதற்காகவும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளிகளாகக்கண்டறியப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை ஜூன் 2025 முதல் வெளியிடத்தீர்மானித்துள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருகோடாவின் கூறுகையில் ,
இந்த முயற்சி சுங்க மோசடியைத் தடுப்பதற்கும் முறையான வரி வசூலை உறுதி செய்வதற்கும் மற்றும் எதிர்காலத்தில்இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. என்றுகூறினார்.
இதேவேளை இந்தத் தகவல்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகபொதுவில் அணுகக்கூடியதாக மாற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊர்காவற்றுறை இறங்குத்துறைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் கோவில் இறங்குத்துறைக்கு கண்காணிப்பு பயணமொன்றைஅமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மேற்கொண்டிருந்தார்.
மக்களை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டுஅறிந்தார் .
இதன்போது பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக அது இல்லை எனவும்சுட்டிக்காட்டிய மக்கள், இதனை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கைகளை ஏற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இறங்குத்துறையை அபிவிருத்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதற்குரிய ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
நெடுந்தீவு வாக்காளரின் நலன்
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பில் நெடுந்தீவு வாக்காளரின் நலன்கருதி குறிகட்டுவான்- நெடுந்தீவு இடையே மேலதிக படகுசேவைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து,
காலை 08:00 மணிக்கு குமுதினி படகும், காலை08:30 மணிக்கு நெடுந்தாரகை படகும், நண்பகல் 01:00 மணிக்குகரிகணன் படகும், பிற்பகல் 03:30 மணிக்கு குமுதினி படகும், பிற்பகல் 04:30 மணிக்கு நெடுந்தாரகை படகும்சேவையில் ஈடுபடவுள்ளன.
இதேவேளை நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து காலை 06:45 மணிக்கு குமுதினி படகும், காலை07:30 மணிக்கு நெடுந்தாரகை படகும், காலை11:30 மணிக்குகரிகணன் படகும், பிற்பகல் 02:30 மணிக்கு குமுதினி படகும், பிற்பகல் 03:00 மணிக்கு நெடுந்தாரகை படகும்சேவையில் ஈடுபடவுள்ளன.
பிரிட்டன் ,கனடாவைத் தொடர்ந்து!
அவுஸ்ரேலியாவிலும் ஈழத்தமிழர் ஒருவர் அஸ்வினி. தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். எல்லா நாடுகளும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்குவதுடன் தேர்தலில் வெற்றி பெறவும் வைக்கின்றன. ஆனால் இந்தியா மட்டும். 40 வருடமாக அகதியாகவே வைத்திருக்கிறதே? எப்போது இந்தியா இரக்கம் காட்டும்?
தென் சூடான்!
தென் சூடானின் பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையில் நேற்று (3) இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில்7 பேர் உயிரிழந்ததோடு 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரியாவிற்கு ஜிஹாதிகள்!
சிரியாவிற்கு ஜிஹாதிகள் பயணிக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, துனிசிய முன்னாள் பிரதமர் அலிலாராயேத்துக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய என்னாஹ்தா கட்சியின் முன்னணி நபரான லாராயேத் 2013 முதல் 2014 வரை பிரதமராகப்பணியாற்றினார்.
அவரும் அவரது கட்சியும் பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை மறுத்து வந்த வேளைஅவர்களுக்கு நீதிமன்றம் 34 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பருத்தித்துறை கடற்கரையில் இளம் பெண்!
பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளைகிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்முன்னெடுத்து வருகின்றனர்.