இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார்
.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார்
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை அண்மையில் (02) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
அண்மையில் கனடாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கனேடியப் பிரதமருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த சபாநாயகர், கனேடிய மக்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அத்துடன் கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆறு தசாப்தத்திற்கு மேலாகக் காணப்படும் உறவுகளையும் நினைவு கூர்ந்தார்.
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கனடா தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார். மகாவலி போன்ற நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், கண்ணிவெடி அகற்றல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் இலங்கைக்கு கனடா வழங்கிய உதவிகளையும் சபாநாயகர் நினைவு கூர்ந்தார். பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைமைகளின்போதும், கடன் மறுசீரமைப்பின் போதும் கனடா வழங்கிய உதவிகளுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.