நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் அரசாங்க தரப்பினர் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர்.
.

நடைபெற்ற உள்ளூராட்சிசபை தேர்தல் பெறுபேறுகளில், தமிழர் பிரதேசத்தில் தமிழ்த்தேசிய கட்சிகள் பெரும்பான்மை பெற்றுவருகின்றன. அரசாங்க தரப்பினர் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர்.
முல்லைத்தீவு : மாந்தை கிழக்கு பிரதேசசபை ,இலங்கை தமிழரசு கட்சி 4 ஆசனங்களைப் பெற்று வெற்றி கொண்டது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் எமது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிப்பதாக
இலங்கை தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு மீண்டும் மக்களது ஆதரவைத் தமிழ்க் கட்சிகள் பெற்று கொண்டதில் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் நாம் எமது மக்களது நம்பிக்கை வீண் போகாமல் காத்திரமாக சேவை செய்வோம் என்றும் உறுதியளிக்கிறோம் என்றார்
மத்துகம, எத்துலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.
இலங்கை தமிழரசுக் கட்சியில் புதிதாக களமிறங்கி ஏறாவூர் பற்று பிரதேச சபைக்காக போட்டியிட்ட ஊடகவியலாளர் நிலாந்தன் ஏறாவூர் பற்றில் அதி கூடிய வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி!