ஐயா ஏகலைவன் தமிழ் மீது அவதூறு பரப்பும் அரைவேக்காட்டுக் கொத்தடிமைகள் !
தோழர். தொல். திருமாவை முட்டுச்சந்தில் தள்ளும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் !!
மூத்த பத்திரிகை ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் பா. ஏகலைவன் அவர்கள் தமிழர் இனத்தின் ஒரு ஒளி விளக்கு என்று உறுதியாக எம்மால் கூற முடியும்.
இது வெறும் புகழ்ச்சி அல்ல, முகத்துதி அல்ல, முழுக்க முழுக்க உண்மை.
எப்படி...?!
சம உரிமை கேட்டு இலங்கையின் வடக்கு கிழக்கில் சுமார் 35 ஆண்டுகளாகப் போராடி வரும் தமிழர் விடுதலை அமைப்பை இலங்கை இராணுவத்தால் வீழ்த்தவே முடியவில்லை. பல்வேறு சூழ்ச்சிகளை அது கைகளில் எடுத்தது.
அதன் இந்த சூழ்ச்சி வேட்கைக்கு ஏற்ப அமைந்த ஒரு நிகழ்வு இராஜிவ் காந்தி படுகொ*லை.
அதுவரை இந்தியாவும், தமிழ்நாடும் விடுதலை அமைப்புக்கும், ஈ*ழ மக்களுக்கும் வழக்கமாக வந்து செல்லும் தாய் வீடாக இருந்தது. மருத்துவம் முதல் உதவிகள் வரை அத்தனைக்கும் அவர்கள் இங்கே எளிதாக வந்து சென்றனர். இடுப்பில் கட்டும் லுங்கி முதல் மருத்துவத்திற்குத் தேவையான பஞ்சு வரை இங்கே இருந்தே சென்று கொண்டிருந்தது.
மொத்தத்தில் ராஜிவ் படுகொ*லைக்கு முன்பு வரை 35 ஆண்டுகால ஈழத் தமிழ் மக்களின் சம உரிமை கேட்டு நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு தாயகம் தமிழ்நாடு வெளிப்படையாகவே உறுதுணையாக இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் பிரித்தாளும் ஒரு அரசியலைக் கைகளில் எடுக்க இலங்கை சமயம் பார்த்துக் காத்திருந்தது.
இலங்கை விரும்பியதற்கு ஏற்ப சரியான சந்தர்ப்பமாக, நிகழ்வாக இராஜிவ் காந்தி படுகொ*லை தமிழ்நாட்டில் சதிகாரர்களால் நிகழ்த்தப்பட்டது.
இதன்பிறகு ஒட்டுமொத்தமாக அத்தனையும் தலைகீழாகத் திரும்பியது. ஒட்டுமொத்தத் தமிழர்களும் இந்தியாவின் முன்னாள் பிரதமரை, காங்கிரஸ் கட்சித் தலைவரைப் படுகொ*லை செய்த ஒரு இனத்தினராகப் பொய்யாக ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
"பார்த்தீர்களா...அந்த விடுதலை அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு, அந்த அமைப்புக்கா தமிழ்நாடு உதவியது ?...அவர்கள் இந்தியாவுக்கே எதிரானவர்கள்" என்ற ஒரு வஞ்சக நச்சுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
அதுவரை தமிழ்நாட்டில் விடுதலை அமைப்புக்கும், மேதகுவுக்கும் ஆதரவாக இருந்தவர்கள் பலர் பின்வாங்கினார்கள். முடிவுகளை மாற்றிக்கொள்ளத் தொடங்கினார்கள். வட இந்திய பத்திரிகை ஊடகங்கள் முழுவதுமாக விடுதலை இயக்கத்துக்கு எதிராகத் திசை திருப்பப்பட்டன. ஒட்டுமொத்தத் தமிழர்களுமே கொலைகாரர்கள் என்பது போல வட இந்திய பத்திரிகை ஊடகங்கள் எழுதத் தொடங்கின.
காட்சிகள் வெகு வேகமாக மாற்றப்பட்டன. விடுதலை அமைப்புக்கு இந்தியா தடை விதித்தது. பயங்க*ரவாத அமைப்பு என்று கூறி அமெரிக்கா தடை விதித்திதது.
அமெரிக்கா தடை விதிக்கக் காரணம், அமெரிக்காவின் வலது கரம் இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பு 1984 ம் ஆண்டு முதல் இலங்கையில் அலுவலகம் அமைத்து அதிகார பூர்வமாக இலங்கைக்கு உதவி வருகிறது என்பதால்.
ஆக, இராஜிவ் படுகொலையில் இன்னமும் விடை அளிக்கப்படாத 100 க்கணக்கான கேள்விகள் உள்ளன.
எனினும், இலங்கையின் இராச தந்திரத்துக்கு இராஜிவ் படுகொலை ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது.
ஆங்கிலத்தில் சொல்வார்கள், "ஒரு நாயைத் தூக்கிலிடுவதற்கு முன் அதற்குக் கெட்ட பெயரை, அவப் பெயரை உண்டாக்கு" Give a dog a bad name and hang him என்று அதாவது ஒரு நல்ல நாயை நீங்கள் கொல்ல ஊர் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள், மாறாக அந்த நாய் ஒரு ரேபிஸ் நோய் பிடித்த வெறி நாய் என்று பொய்யாக ஒரு அவதூறு பரப்பிவிட்டு பிறகு அதைக் கொன்றால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது போல...
இராஜிவ் படுகொலை என்ற ஒன்றை வைத்து விடுதலை இயக்கம் மீது இந்தியாவில் எதிர் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இயக்கத்தை உலக அளவில் தனிமைப்படுத்த இலங்கைக்கு இது பேருதவியாக இருந்தது. இறுதியில் 2009 ல் முற்றும் முழுதுமாக தமது சூழ்ச்சிக் கணக்கை நேர் செய்து கொண்டது இலங்கை.
இராஜிவ் படுகொ*லை நடந்த 1991 ம் ஆண்டுக்குப் பிறகு ஒட்டுமொத்தத் தமிழர் வரலாறும் தலைகீழாக மாறியது.
ஆனால் அன்று முதல் இன்றுவரை அந்தப் படுகொலையை விடுதலை இயக்கம் செய்யவில்லை என்ற ஒரு உண்மையைத் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தவர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐயா திருச்சி வேலுச்சாமி அவர்கள்.
ஈழம் என்ற சொல்லையோ, மேதகு, தமிழர் என்ற சொல்லையோ கூட சொல்லத் தயங்கும் நிலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.
எனினும், இலங்கை அரசு, இந்திய அரசின் அதிகாரிகள், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து ஏற்படுத்திய பொய்ப் பரப்புரைகள் ஈழத் தமிழர் ஆதரவுக் குரல்கள் தமிழ்நாட்டில் இருந்து எழாமல் வைத்துக்கொள்ளக் காரணமாக அமைந்தது.
இத்தகைய இருள் சூழ்ந்த நிலையில்தான், தூக்கு கயிற்றில் நிஜம், நளினி பிரியங்கா சந்திப்பு, சிவராசன் டாப் சீக்ரெட் எனும் மூன்று அதி முக்கிய நூல்கள் பா. ஏகலைவன் அவர்களால் தொகுத்து எழுதி வெளிக்கொண்டு வரப்பட்டன.
ஏகலைவன் மீது இன்று அவதூறு பரப்பும் "எனக்கு விடுதலை இயக்கத்தில் அந்தத் தலைவரைத் தெரியும், இந்தத் தலைவரைத் தெரியும்" என்றெல்லாம் வாய் கிழியப் பேசும், எவரும் ராஜிவ் படுகொ*லைக்குப் பிறகான கனத்த மவுனத்தை, அண்டிக்கிடந்த இருளைக் கிழித்து ஒரு ஒளிக்கீற்றைக் கூடப் பாய்ச்சத் துணியவில்லை.
ஈழம் சென்றுவிட்டு வந்து நேராக அறிவாலயத்தின் கால்களில் விழுந்தவர்கள் எல்லாம் இன்று ஏகலைவன் குறித்து ஆள் வைத்து அவதூறு பரப்புகிறார்கள்.
இந்த மூன்று புத்தகங்கள்தாம் ஒட்டுமொத்தத் தமிழர் இனத்தை மீண்டும் தலை நிமிர வைத்தது.
காரணம், தூக்குக் கயிற்றில் நிஜம் நூல் திருச்சி வேலுச்சாமி ஐயா அவர்கள் எழுதிய நூல். நளினி - ப்ரியங்கா சந்திப்பு என்பது சிறையில் இருக்கும்போது நளினி எழுதிய நூல். சிவராசன் டாப் சீக்ரெட் எனும் நூல் சிறையில் இருக்கும்போது இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதிய நூல்.
இதில் சிறையில் இருந்த நளினியும், இரவிச்சந்திரனும் காகிதங்களில் எழுதி எழுதி வழக்கறிஞர் மூலமாகவும், வாய் மொழி மூலமாகவும் கூறியவற்றையெல்லாம் தொகுத்து ஒரு விறுவிறுப்பான, உண்மையை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்ப் போல இரவு பகல் பாராது அமர்ந்து எழுதியவர் பா. ஏகலைவன். திருத்தம் பார்த்து, அச்சடித்து அதை வெளியிட்டவர் பா. ஏகலைவன்.
இதில், நளினி - பிரியங்கா சந்திப்பு நூலுக்காக நளினி - முருகன் தரப்பில் தரப்பட்டது மொத்தமே ஒன்றரை லட்சம் ரூபாய். ஆனால், அச்சடித்து வெளியிடப்பட்டது சுமார் 6 பதிப்புகள். இதில் சுமார் 3000 புத்தகங்களை நளினியின் கணவர் முருகனே வாங்கிக்கொண்டார். மேலும் பல 100 நூல்கள் முருகனின் சிபாரிசில் விலையில்லாமல் கொடுக்கப்பட்டது. சுமார் 2500 புத்தகங்கள் மட்டுமே விலைக்கு விற்கப்பட்டது. முதலில் கொடுக்கப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் தவிர முருகன் தரப்பிலோ, முருகன் பெயரிலோ எந்த ஒரு தொகையும் ஏகலைவனுக்குத் தனியாகக் கொடுக்கப்படவேயில்லை. இறுதியில் கணக்குகளை பார்த்தபோது 1,80,000 ரூபாய் நளினி - முருகன் தம்பதிதான் பா.ஏகலைவனுக்கு அளிக்க வேண்டியிருந்தது. இந்தக் கணக்குகளை சரி பார்த்த பேரறிவாளன் ஈரோட்டில் இன்னமும் இருக்கிறார்.
இதற்கிடையில் நளினியின் வழக்கறிஞர் ஒருவர் நளினி புத்தகத்தில் பா. ஏகலைவன் பெயரை எல்லாம் நீக்கிவிட்டு தனியாக 1000 புத்தகங்கள் அச்சடித்து வெளியிட்டார். ஆனால் அது விற்கப்படவில்லை, செல்லரித்துப் போனது.
சிறையில் இருந்து வெளிவந்தவுடன் நளினி முருகன் இருவரும் பா. ஏகலைவனை சந்தித்தனர். அப்போது முருகன், ஏகலைவனிடம் தவறுகளை ஒப்புக்கொண்டார். பணத்தை சிறிது காலத்தில் அளித்துவிடுவதாக நளினி கூறினார். அதை மறுத்துவிட்டார் பா. ஏகலைவன்.
ஆக, கடன் பட்டுக் கடன் பட்டு புத்தகத்தைப் பிரசவித்து உலகறியக் கொண்டு சென்றவர் பா. ஏகலைவன். எந்த ஒரு வரலாறும் தெரியாத வாந்தி எடுக்கும் மலிவு விலை மதுபானக் குடிகாரர்கள் போல சிலர் காணொலிகளில், சமூக ஊடகங்களில் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்து, சிவராசன் டாப் சீக்ரெட். இந்த நூல் இரா.பொ.இரவிச் சந்திரனால் எழுதப்பட்டது என்று மேலே குறிப்பிட்டிருக்கிறேன். இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அதையும்தொகுத்து எழுதித் தர இரவிச்சந்திரன் பா.ஏகலைவனிடம்தான் அளித்திருக்கிறார். இந்த வாந்தி போதைக்காரர்கள் சொல்வது போல பா.ஏகலைவன் நடந்திருந்தால் இரண்டாம் பாகத்தை அவரிடம் இரவிச்சந்திரன் அளிப்பாரா ?!
மண்டைக்குள் இருக்கும் மூளையைக் கொஞ்சமாவது பயன்படுத்த வேண்டாமா ?
அடுத்து...பா. ஏகலைவன் தமிழ்நாடு அரசின் இயல் இசைக் கல்லூரியில் படித்த காலத்தில் போது மண்டல் கமிஷன் தொடர்பாக எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. அவர் அன்று இயல் இசைக் கல்லூரியின் மாணவர் தலைவர். பல ஆண்டுகளாக, அங்கே பிராமணர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் சம்ஸ்கிருத, தெலுங்கு, கன்னட கீர்த்தனைகள் மற்றும் இசைக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதை எதிர்த்துதான் அவரது தலைமையில் மாணவ மாணவியர் போராட்டம் நடைபெற்றது, இறுதியில் அன்றைய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, "இனி தமிழிலும் அங்கு இசை ஒலிக்கும்" என்று ஆணை பிறப்பித்தார். இசைக்கல்லூரியியல் தமிழர் இசையை ஒலிக்கச் செய்து போராடி வெற்றி கண்டவர் பா.ஏகலைவன்.
இதுவும் இந்த விசிகவில் உள்ள சில அரைவேக்காடுகளுக் தெரியவில்லை.
அடுத்து...அவரது நண்பர் இளங்கோவிடம் சங்கிலி திருடியதாக ஒரு வாந்தி. அவரது நண்பர் போதையில் உறங்கிவிட அந்த சங்கிலியை பத்திரமாக எடுத்து அவரது வீட்டில் அடுத்த நாள் கொடுத்தவர் ஏகலைவன். காவல்துறை..விசாரனை எனும் சீனுக்கே அங்கு இடம் இல்லை.
வதந்தி எனும் வாந்திகளை எடுத்துக்கொண்டிருக்கும் இவர்களைக் கட்டுப்படுத்தி வைக்காவிட்டால் தோழர். தொல்.திருமாவை இவர்களே முட்டுச் சந்தில் கொண்டு சென்று நிற்க வைப்பார்கள்.
சூரியனைப் பார்த்து சொறிநாய்கள் குலைக்கின்றன.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர். 21/9/25


