இன்றைய உலக நடப்புக்கள் - 03.11.2025
இன்றைய முக்கிய செய்திகள்!
- எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றசாட்டில் 4 விசைப்படகுடன் 35 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மெக்சிகோவில் வணிக வளாகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 23 பேர் உயிரிழப்பு.இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என கண்டறியப்பட்ட நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை
- ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (23:12) ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் அல்லது உயிரிழப்புகள்குறித்த உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
- காஸாவில் பிணையாகப் பிடிக்கப்பட்டிருந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, தங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது அங்கு நீடிக்கும் மனிதாபிமான நெருக்கடியின் தீவிரத்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
- பிரான்சில் எஸ்சோன் (Essonne) பகுதியில் நடத்தப்பட்ட பெரிய சோதனை நடவடிக்கையில் சுமார் இரண்டு டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
⚖️ நீதிமன்றம் மற்றும் குற்றச் செய்திகள்.
லே ஸ்கௌர்னெக் வழக்கு: இழப்பீடு குறித்து விசாரணை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் லே ஸ்கௌர்னெக் (Le Scouarnec) சம்பந்தப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு குறித்து இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றம் விசாரிக்கிறது.
அந்துவான் சோலகாரோ கொலை வழக்கு (06:24) கோர்சிகா பகுதியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான அந்துவான் சோலகாரோ (Antoine Sollacaro) படுகொலை செய்யப்பட்ட வழக்கு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று விசாரணைக்கு வருகிறது.
???? சமூகம் மற்றும் கலாச்சாரம்.
பிரபல துரித உணவகச் சங்கிலியான 'ஃபைவ் கைஸ்' (Five Guys), பிரான்சில் உள்ள தனது ஆறு உணவகங்களில் பன்றி இறைச்சி விற்பனையை நிறுத்தி, முழுமையாக ஹலால் முறைக்கு மாறியுள்ளது. அத்துடன், இந்த உணவகங்களில் மது விற்பனையையும் நிறுத்தியுள்ளது. நிறுவனத்தின் இந்த முடிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும், வாடிக்கையாளர்களிடையே கலவையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
- பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெனத் தனிப் பெட்டிகளை (wagons) ஒதுக்க வேண்டும் என்று கோரி ஒரு மனு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள 'நெமிலிஸ்' (Némésis) என்ற பெண்ணுரிமை அமைப்பின் செய்தித் தொடர்பாளர், "இது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் (பெண்கள் பாதுகாப்பு) பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் காணாமல், ஒரு ஆழமான காயத்தின் மீது தற்காலிகமாக 'பேன்ட்-எய்ட்' ஒட்டுவது போன்றது" என்று விமர்சித்துள்ளார்.
- பிரபல பிரெஞ்சு ராப் பாடகர் ஜுல் (Jul), தனது ரசிகர்களுக்கு மாபெரும் இசை விருந்தாக, மே 2026 இல் நான்கு பெரிய இசை நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளார். இதில் இரண்டு நிகழ்ச்சிகள் பாரிஸின் புகழ்பெற்ற Stade de France மைதானத்திலும், மற்ற இரண்டு நிகழ்ச்சிகள் மார்சேயின் Stade Vélodrome மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
- வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு : தொல்லியல் துறையில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. அகழ்வாராய்ச்சியின்போது, "ஒரு பண்டைய ரோமானிய பாலம்" (un ancien pont romain) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது ஒரு மிக முக்கியக் கட்டிடக்கலை கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.


