யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஒரு தொகுதி போதை மாத்திரைகள்
யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் 180 போதை மாத்திரைகளுடன் 3 சந்தேக நபர்கள் கைது!
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஒரு தொகுதி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் திலக்ஷி தனபாலா அவர்களின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் கொஸ்தாபிள் ரமேஷ் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கொழும்புத்துறை பகுதியில் வைத்து 20 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த இளைஞனிடம் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையின் போது அந்த சந்தேக நபரினால் போதை மாத்திரைகள் வாங்கப்பட்ட வீடு காண்பிக்கப்பட்டது. அந்த வீட்டிலிருந்த சந்தேக நபர் பின்பக்க கதவு வழியாக தப்பிச் சென்ற நிலையில் 700 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. தப்பிச்சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்புதுறை பகுதியில் 3 சந்தேக நபர்கள் கைது!
யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் 180 போதை மாத்திரைகளுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 18,22, மற்றும் 24 வயதுடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ர பொலிஸ் அதிகாரி அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


