பாரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் பயணிகளே! இந்த வாரத் தொடருந்து பயணத்தைத் திட்டமிடும் முன் கவனிக்கவும்.
இந்த வாரம் முழுவதும் ஆங்காங்கே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணச் செயலிகளில் (RATP/SNCF Apps) வழித்தடங்களைச் சரிபார்த்துக் கொள்வது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.
பாரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் பயணிகளே! இந்த வாரத் தொடருந்து பயணத்தைத் திட்டமிடும் முன் கவனிக்கவும்.
நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை வரை பொதுப்போக்குவரத்தில், குறிப்பாகத் தொடருந்து சேவைகளில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள்குறித்த விரிவான செய்தித் தொகுப்பு இதோ:
மெட்ரோ தொடருந்து பயணிகளே உஷார்!
பாரிஸின் நிலத்தடித் தொடருந்துகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
தடம் 1 (Line 1): புகழ்பெற்ற 'துய்லரி' (Tuileries) நிலையத்தின் நுழைவாயில்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக வார இறுதி நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 11:45 மணிவரை மூடப்பட்டிருக்கும்.
தடம் 13 (Line 13): நவீனமயமாக்கல் பணிகள் நடைபெறுவதால், 7-வது வட்டாரத்தில் உள்ள 'வாரென்' (Varenne) நிலையத்தில் நவம்பர் 26 முதல் 30 வரை தொடருந்துகள் நிற்காது.
தடம் 14 (Line 14): நவம்பர் 23 (ஞாயிறு) அன்று பிற்பகல் 2 மணிவரை இந்தத் தடம் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும்.
ஆர்.இ.ஆர் (RER) தடங்களில் கவனிக்க வேண்டியவை
புறநகர் தொடருந்துகளில் பல இடங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன:
RER A: டிசம்பர் 19 வரை, வார நாட்களில் இரவு 9:50 மணிக்கு மேல் 'செர்ஜி-லு -ஹோ (Cergy-Le Haut) மற்றும் 'மேசன்-லாஃபிட்' (Maisons-Laffitte) இடையே தொடருந்து சேவை இருக்காது. வார இறுதி நாட்களில் 'பொய்சி' (Poissy) செல்லும் தொடருந்துகள் பயண நேரத்தைச் சற்று நீட்டித்துக்கொள்ளும்.
RER B (விமானப் பயணிகள் கவனத்திற்கு): டிசம்பர் 12 வரை, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:45 மணிக்கு மேல், Gare du Nord மற்றும் சார்ஸ் து கோல் விமான நிலையம் (CDG 2-TGV) இடையே தொடருந்துகள் இயங்காது. இதற்கு மாற்றாகப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 23 அன்று இரவு 11 மணிக்குப் பிறகு சில முக்கிய நிறுத்தங்களில் தொடருந்துகள் நிற்காது.
RER D: இந்த வார இறுதி நாட்களிலும் (நவம்பர் 22-23), அடுத்த வார இறுதியிலும் (நவம்பர் 29-30), பாரிஸ் Gare de Lyon மற்றும் Creil இடையே போக்குவரத்து துண்டிக்கப்படும்.
RER E: Nanterre-La-Folie மற்றும் வில்லியர்ஸ்-சுர்-மார்ன் (Villiers-sur-Marne) இடையே நவம்பர் 23 மற்றும் 29 தேதிகளில் போக்குவரத்து தடைபடும்.
டிராம் (Tram) சேவை நிலவரம்
T1: 'இல்-செயின்ட்-டெனிஸ்' (L'Île-Saint-Denis) பகுதியில் மூன்றாம் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் காரணமாக, 'அஸ்னியர்ஸ்' மற்றும் 'செயின்ட்-டெனிஸ்' தொடருந்து நிலையம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது சீராக 2026 கோடைக்காலம் வரை ஆகலாம்.
T2: மிகவும் பரபரப்பான இந்தத் தடத்தில், 'Porte de Versailles மற்றும் Suzanne Lenglen இடையே 2026 பிப்ரவரி வரை தொடருந்து சேவை இருக்காது. பயணிகள் T3a டிராம் அல்லது நடைப்பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
T13 & T14: இந்த இரண்டு தடங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் (குறிப்பாக வார இறுதி நாட்களில்) முழுமையான சேவை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கான சிறு குறிப்பு: இந்த வாரம் முழுவதும் ஆங்காங்கே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வீட்டை விட்டுக் கிளம்பும் முன்பே உங்கள் பயணத் செயலிகளில் (RATP/SNCF Apps) வழித்தடங்களைச் சரிபார்த்துக் கொள்வது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.
இனிய மற்றும் பாதுகாப்பான தொடருந்து பயணம் அமையட்டும்!


