நஞ்சு மரமெனஅநியாயமாக வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்ததின் பிஞ்சு அதே மண்ணில் இன்று...
மண்ணின் குரல்... மாற்றத்திற்கான அறைகூவல்!"
நஞ்சு மரமெனஅநியாயமாக வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்ததின் பிஞ்சு அதே மண்ணில் இன்று!
அரசியல் வாதிகளாலும் வியாபாரிகளாலும் திப்டமிட்டு வழிநடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் வீரப்பன் அவர்கள்.
வீரப்பன் மகள் வித்யா ராணி, முதலில் பாமகவில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர்இ 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில ஒபிசி துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் வித்யா ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், 'வீரப்பன் காட்டை ஆண்டார், அவரது மகள் வித்யா நாட்டை ஆளப்போகிறார்' என்று சீமான் பேசினார். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த வித்யா ராணி, தொகுதியில் நான்காம் இடம் பிடித்தார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக இயங்கி வந்தார் வித்யா ராணி.
மேலும்இ நாம் தமிழர் கட்சியிலிருந்து பல மாநில நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகிய நிலையில் புதிய மாநில பொறுப்பாளர்களை நாம் தமிழர் கட்சி நியமித்து வருகிறது. இந்நிலையில் வீரப்பன் மகள் வித்தியா ராணி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
ஒரு சில ஆண்டு கட்சியில் சேர்ந்தவருக்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ' சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 207ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பன் (18574358150) அவர்கள்இ நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
வீரப்பன் மகள் வித்யா ராணி இன்று! - ' மாற்றத்தை நோக்கி முன்னேற்றத்தை நோக்கி மேட்டூர். காவிரியின் மடியில் இருந்தும் தாகத்தில் தவிக்கும் கிராமக்கள்!
இந்த மண் வெறும் நிலமல்ல; இது பல வரலாறுகளைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் உணர்வு. மேட்டூர் என்றாலே அணை மட்டுமல்ல, இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனின் உழைப்பும், அவர்களின் தீர்க்கப்படாத கனவுகளும்தான் என் கண் முன்னே நிற்கிறது. என் தந்தை இந்த மண்ணையும் மக்களையும் எவ்வளவு நேசித்தார் என்பது உலகறியும். அதே ரத்தமும், அதே மண்ணின் பாசமும் இன்று என்னை உங்கள் முன் நிற்க வைத்திருக்கிறது. மேட்டூர் தொகுதி என்பது நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு வைரக்கல். சரியான பட்டை தீட்டல் இருந்தால், இது தமிழகத்தின் முதன்மைத் தொகுதியாக மாறும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
எனது கனவு... நமது லட்சியம்! விவசாயிகளின் கண்ணீர் துடைப்போம்: காவிரியின் மடியில் இருந்தும் தாகத்தில் தவிக்கும் கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, நீர் மேலாண்மையைச் சீரமைப்போம். இளைஞர்களுக்கு மேட்டூரின் தொழில் வளத்தைப் பயன்படுத்திஇ நம் வீட்டுப் பிள்ளைகள் வேலை தேடி வெளியூர் செல்வதைத் தடுத்து, இங்கேயே தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வலுவான அடித்தளம் அமைப்போம். கல்வி மற்றும் சுகாதாரம்: உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் சென்றடைவதை உறுதி செய்வோன். இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல; இந்த மண்ணின் மகளாக நான் ஏற்கும் ஒரு தார்மீகப் பொறுப்பு. என் தந்தையின் பெயரைக் காப்பதும், என் மக்களின் வாழ்வை உயர்த்துவதும் ஒன்றே என நான் கருதுகிறேன்.
மாற்றம் என்பது சொல்லில் அல்ல, செயலில் மலரட்டும்! மேட்டூரின் முன்னேற்றத்திற்காக என்னோடு கைகோர்க்கத் தயாராகுங்கள். நமக்கான ஒரு புதிய விடியலை நாமே உருவாக்குவோம்! மாற்றத்தை விரும்புவோம்... மேட்டூரை முன்னேற்றுவோம்!


