சுனாமி பேரிழப்பின் 21 ஆண்டுகள்...!
2004 சுனாமியில் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்.
சுனாமி பேரிழப்பின் 21 ஆண்டுகள்...!
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்தின் விளைவாக எழுந்த சுனாமி அலைகள் இலங்கையின் கடற்கரை பகுதிகளை கடுமையாகத் தாக்கின. கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு கடற்கரை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள், மீன்பிடி தொழில், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரங்கள் அழிந்தன. சுமார் 35,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும், இலட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்ததாகவும் மதிப்பிடப்படுகிறது. இந்த பேரழிவு இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிகக் கொடிய இயற்கை அனர்த்தமாக பதிவு செய்யப்பட்டது.
2004 சுனாமியில் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள். திடீரென வந்த அந்த பேரலை பல குடும்பங்களின் கனவுகளையும் வாழ்க்கையையும் பறித்துச் சென்றது.
அவர்களின் நினைவுகள் எப்போதும் எங்கள் மனங்களில் நிலைத்து நிற்கும். துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலும் தைரியமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்.
அவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்.


