யாழ்.நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மா!
மாமுனை கடல் பகுதிகளில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல்!
யாழ்.நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் 22 வயதுடைய நபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நாவந்துறை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில், இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தின் மாமுனை கடல் பகுதிகளில் 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, முப்பத்து மூன்று (33) கிலோகிராமை விட அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலகேணி கடற்படை நிலையத்தால் மாமுனை கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதிகளில் மிதந்து கொண்டிருந்த ஒரு (01) சந்தேகத்திற்கிடமான பையானது பரிசோதிக்கப்பட்டது, மேலும் பையில் பொதிச்செய்யப்பட்டிருந்த முப்பத்து மூன்று (33) கிலோகிராமை விட அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு ஏழு (07) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறதுடன்,மேலும் கடற்படையின் நடவடிக்கைகளின் போது கரைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.


