புதுடெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
"உமர் முகமதுவும், அவரது கூட்டாளிகளும் டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த அமோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெயை (ANFO) பயன்படுத்தினர்.
புதுடெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு மருத்துவர்களான அதீல் அகமது ராதர் மற்றும் முஜம்மில் ஷகீல் ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஆவார்.
கடந்த சில நாட்களாக பரிதாபாத்தில் இரண்டு முக்கிய நபர்களை கைது செய்து, 2,900 கிலோ வெடிப் பொருட்களைக் கைப்பற்றியதை அறிந்ததும் உமர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்தே அவர் இந்த குண்டுவெடிப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.
"உமர் முகமதுவும், அவரது கூட்டாளிகளும் டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த அமோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெயை (ANFO) பயன்படுத்தினர். அவர்கள் காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து, செங்கோட்டைக்கு அருகிலுள்ள நெரிசலான பகுதியில் இத் தாக்குதலை நடத்தினர்" என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.
செங்கோட்டை அருகே வெடித்த வெள்ளை ஹூண்டாய் ஐ20 கார் பதர்பூர் எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழைவதை சிசிடிவி வீடியோ மற்றும் படங்கள் காட்டுகின்றன. சிசிடிவி காட்சிகளில் ஆரம்பத்தில், ஓட்டுநரின் முகம் தெளிவாகத் தெரியும், ஆனால் கார் முன்னோக்கி நகரும்போது,பின்னால் முகமூடி அணிந்த ஒருவர் இருப்பதும் பதிவாகியுள்ளது.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் பல பேரிடம் கைமாறியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒக்டோபர் 29 அன்று தேவேந்தரிடமிருந்து ஆமிர் என்பவருக்கும், பின்னர் தாரிக் மற்றும் உமருக்கும் கைமாறியது. ஆமிர் மற்றும் தாரிக் இருவரையும் டெல்லி போலிஸார் விசாரித்து வருகின்றனர். ஆமிர், உமர் முகமதுவின் சகோதரர் ஆவார். ஆமிர் கார் சாவியை வைத்திருக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த வார தொடக்கத்தில், போலிஸார் அனந்த்நாக்கில் சோதனை நடத்தி, அதீலின் லொக்கரில் இருந்து ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை கண்டுபிடித்தனர். அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை அதீலுடன் சேர்ந்து மற்றொரு மருத்துவரான முஜம்மில் ஷகீல் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது, அவர் நேற்று (10) கைது செய்யப்பட்டார்.
மருத்துவர் ஷகீலைப் போலவே பெண் மருத்துவரான டொக்டர் ஷாஹீன் ஷாஹித் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டன.


