இந்தியாவுக்குள் நுழையும் பிரான்சின் 'கலரீ லா ஃபாயெட்'!( Galeries Lafayette) - மும்பையில் பிரம்மாண்ட தொடக்கம்!
இந்தியா ஒரு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு என்பதை உணர்ந்த 'கலரீ லா ஃபாயெட்',
இந்தியாவுக்குள் நுழையும் பிரான்சின் 'கலரீ லாஃபாயெட்'! - மும்பையில் பிரம்மாண்ட தொடக்கம்!
பிரான்சின் மிகப்பிரபலமான மற்றும் பழைமையான ஆடம்பரப் பல்பொருள் அங்காடியான 'கலரீ லாஃபாயெட் (Galeries Lafayette), இப்போது இந்தியாவின் ஆடம்பரச் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் முதல் படியாக, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் தனது முதல் பிரம்மாண்ட அங்காடியை இந்த மாதம் (நவம்பர்) திறந்து சாதனை படைத்துள்ளது.
ஆதித்யா பிர்லா (Aditya Birla) குழுமத்துடன் இணைந்து திறக்கப்பட்டுள்ள இந்த அங்காடி, சுமார் 8,400 சதுர மீட்டர் பரப்பளவில், ஐந்து மாடிகளைக் கொண்டுள்ளது. இதில் 250-க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர (Luxury) மற்றும் டிசைனர் பிராண்டுகள் இடம்பெற்றுள்ளன.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், 'கலரீ லாஃபாயெட்' கால் பதிக்கக் காரணம் என்ன?
இந்தியாவின் ஆடம்பரப் பொருட்களுக்கான சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தச் சந்தையின் மதிப்பு சுமார் 85 பில்லியன் டொலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான புதிய மில்லியனர்கள் (லட்சாதிபதிகள்/கோடீஸ்வரர்கள்) உருவாகின்றனர்.
இன்றைய இந்திய நுகர்வோர், உலகளாவிய பார்வையுடனும், ஆடம்பரப் பொருட்களை வாங்குவதிலும், உயர்தர அனுபவங்களைப் பெறுவதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் கூறுகையில், "இந்தியாவில் ஆடம்பரச் சந்தை ஒரு பெரிய மாற்றத்தின் விளிம்பில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு என்பதை உணர்ந்த 'கலரீ லா ஃபாயெட்', மும்பையைத் தொடர்ந்து தனது இரண்டாவது அங்காடியை டெல்லியிலும் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
'கலரீ லா ஃபாயெட்' குழுமத்தின் தலைவர் நிக்கோலஸ் ஹூஸே, "இது எங்கள் சர்வதேச வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை. பிரான்சின் பாரம்பரியத்தையும் படைப்பாற்றலையும், இந்தியாவின் ஆற்றல் மற்றும் கலாச்சாரச் செழுமையுடன் இணைத்து வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று கூறியுள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே பெய்ஜிங், ஷாங்காய், துபாய் மற்றும் தோஹா போன்ற பல உலக நகரங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


