தாய் மொழி தினம்!
தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால் இனவாதம் துவங்கியது துரதிஷ்டமானது.
இந்தியாவிடமிருந்து பிரிந்து போன பாகிஸ்தானில், "உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. அவர்கள் சுதந்திரம் அடைஞ்சு அஞ்சு வருஷம் கழிச்சு அதாவது 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை எழுப்பி ஆர்பாட்டம். போராட்டமெல்லாம் நடத்தினார்கள். அதன் ஒரு கிளைமாக்ஸா இதே 1952 பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்கா யுனிவர்ச்சிட்டி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அப்போது பலியான மாணவர்களின் நினைவாகவே யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.
தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால்,
எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர்.
ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால் இனவாதம் துவங்கியது துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழித்தல் கூடாது.
"ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது.
- முகநூல் பதிவு


