செம்மணி மனிதப் புதைகுழிகளையும் சிறிலங்காவின் ஏமாற்றுதலையும் அம்பலப்படுத்தும் வாகன விளம்பரப் பலகை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்(TGTE) நியூயார்க்கில் ஒரு நடமாடும் விளம்பரப் பலகைப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
செப்டம்பர் 22, 2025 அன்று, ஐ.நா. பொதுச் சபையின் தொடக்க விழாவின் போது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்(TGTE) நியூயார்க்கில் ஒரு நடமாடும் விளம்பரப் பலகைப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்தப் பிரச்சாரம், சிறிலங்காவிற்கும், தமிழ் மக்களிற்குமான போரட்டத்தின்போது குழந்தைகள் உட்பட தமிழ் மக்கள் சர்வதேச சட்டங்களிற்கு முரணான வகையில் கொல்லப்பட்ட எலும்புக்கூடுகளையும் , மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எலும்புக் கூடுகளையும் உள்ளடக்கி இருந்த செம்மணிப்புதைகுழிகளை உலகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதும் மேலும் சிறிலங்காவின் தொடர்ச்சியான ஏமாற்று அரசியலையும், தண்டனையின்மையினையும் எடுத்துக்காட்டியது.
விளம்பரப் பலகையில் பின்வரும் செய்திகள் இடம்பெற்றிருந்தன
• மனிதப் புதைகுழிகள், வைலிந்து காணாமல் ஆக்கப்பட்டவை, நீதியைத் தடுக்க சிறிலங்காவின் தொடர்ச்சியான முயற்சிகளை ஆவணப்படுத்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) அறிக்கைகள் பற்றியகுறிப்புகள்.
• ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை, சிறிலங்கா தொடர்ச்சியாக ஏமாற்றுவதை சித்தரிக்கும் படம்.
• 1990 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் முதன்முதலில் ஏற்றப்பட்ட தமிழீழ தேசியக் கொடியையும் மேலும் நவம்ப்ர் 21 ஐ ஒவ்வொருவருடமும் தமிழீழத் தேசியக் கொடி நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்திய செய்தியையும் குறிக்கப்பட்டிருந்தன.
சிறிலங்கா தமிழர்களுக்கு எதிரான குற்றங்களை சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டுவதும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவசியத்தை வலியுறுத்துவதும், தமிழ்மக்களின் மற்றும் தமிழீழத்திற்கான போராட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதும் இந்தப்பிரச்சாரத்தின் நோக்கமாகும்.


