'ராமதாஸூம், திருமாவளவனும் தான் எங்களுக்கு பெரியார்' - சீமான்
திமுக தான் பாஜகவின் உண்மையான ஏ டீம் என சீமான விமர்சித்துள்ளார்.
ஆபரேஷன் சித்தூர் வெற்றிக்காக பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பேரணி செல்லாத நிலையில், தமிழகத்தில் பேரணி சென்ற திமுக தான் பாஜகவின் உண்மையான ஏ டீம் என சீமான விமர்சித்துள்ளார்.
தமிழ் தேசிய பிள்ளைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் ராமதாஸும், திருமாவளவனும் தான் பெரியார் என சீமான் தெரிவித்தார்.
‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.3) மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 தேர்தலில் போட்டியிடப்போகும் 4 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். அதன்படி, பூம்புகாரில் இளையநகுலனும், மயிலாடுதுறையில் சமூக செயல்பாட்டாளர் காசிராமனும், சீர்காழியில் அம்பேத்ராஜனும், திருவிடைமருதூரில் திவ்யபாரதியும் போட்டியிடப்போவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், “பெரியாரை போற்றுகிறோம்! ஆனால், இங்கே யார் பெரியார் என்பதுதான் எனது பேச்சு. மாற்று கருத்தை கருத்தாக எதிர்கொள்கிற முதிர்ந்த பண்பு திராவிட இயக்கத்தினரிடம் இல்லை. இறைவனை விமர்சித்த இவர்களால், ஈவெராவை விமர்சிப்பதை பொறுத்துகொள்ள முடியவில்லை என்றால் எவ்வளவு நடுங்கி போய் உள்ளார்கள் என்பது தெரிகிறது. ஒரு கருத்தை சகிக்க இயலாதவர்கள் சமத்துவம், சகோதரத்துவம் பேசுவது வேடிக்கையாக உள்ளது.


