விஜய் இப்படி பேசுவது நாம் தமிழர் கட்சியைச் தவிர்த்து மற்ற திராவிடக் கட்சிகளைத் தான்.
மற்றவர்கள் ஆரம்பித்த கட்சி என்கிறார் விஜய்! யார் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்? - கேள்வி எழுப்பியுள்ள மூத்த ஊடகலியலாளர் இராவணா பா. ஏகலைவன்,
‘கனா பேச்சு’
விஜய் இப்படி பேசுவது நாம் தமிழர் கட்சியைச் தவிர்த்து மற்ற திராவிடக் கட்சிகளைத் தான்.
மற்றவர்கள் ஆரம்பித்த கட்சி என்கிறார் விஜய்! யார் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்? - ‘கனா பேச்சு’.
அண்ணா ஆரம்பித்த கட்சியையும், எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியையும் தான் விஜய் சொல்கிறார். அதற்குத் தான் பொருத்தமாக இருக்கும். நாம் தமிழர் கட்சியினரை அல்ல.
அந்த கட்சியை திரு ஆதித்தனார் அவர்கள் ஆரம்பித்தார். எதிர்கொள்ள முடியாமல் அதை கைவிட்டு, திமுகவில் கட்சியை இணைத்துக் கொண்டார்.
49 ஆண்டுகள் கழித்து, 2010-ல் அந்த நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்கி, எந்த லாட்டரி சீட்டு அதிபரின் துணையில்லாமலும், கோடிகளில் கொள்ளையடித்த ஊழல் பேர்வழிகளை உடன் வைத்துக் கொள்ளாமலும் 2016 தேர்தலில் களம் இறங்கி, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் எட்டு சதவீத வாக்காளர்களை தக்க வைத்து கொண்டுள்ளார் சீமான்.
ஆக விஜய் சவால் விடுவது நிச்சயம் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் பொருந்தாத ஒன்று. (அதனால் நாதகவினர் தவிர்த்து ஒதுங்குவது நன்று.)
திமுக எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் தனித்து நிற்க முடியுமா? வெற்றிகான முடியுமா? அதிமுக அப்படி செய்ய முடியுமா என்பதே விஜயின் சவால் கேள்வி.(அதிமுககூட தனித்து நின்று தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது.)
பிறகு ஒரு விடயம், தமிழ் நாட்டில் யாருடனும் கூட்டணி வைக்காமல், புதிய கட்சியை தொடங்கி மக்களோடும், கடவுளோடும் தான் என்று கூறியே தனித்து நின்று 12 சதவீத வாக்குகளை வாங்கியது தேமுதிக விஜயகாந்த் கட்சி. (இதில் கூட திராவிடர் கழகம் என்ற முகம் இருக்கின்றது.)
ஆக, தமிழ்நாட்டில் சுயமாக கட்சி தொடங்கி 12 சதவீத வாக்குகளை வாங்கிய ஒரு கட்சியும்(இப்போது தேய்ந்து போய்விட்டது), எட்டு சதவீதம் வாங்கிய நாம் தமிழர் கட்சியும் இருக்கின்றது விஜய் சார். வரலாறு தெரியாமல் வெட்டி சவடால் பேசாதீர்கள்.
தவிர, இன்னமும் நீங்கள் உங்களை ஒரு சதவீத வாக்கு வங்கி என்பதைக்கூட நிரூபித்துக் கொள்ளவில்லை. இதில் முப்பது சதவீத வாக்கு வைத்திருப்பதாக வேறு ‘கனா பேச்சு’. உங்களுக்கு வேண்டிய கருத்துக் கணிப்புகள் வேண்டுமானால் 30 சதவீதத்தை வாரிக் கொடுக்கலாம். உண்மையில் தேர்தல் களத்தில் நின்று அப்படி நிரூபித்தீர்களா?
யார் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட் அது? என மூத்த ஊடகலியலாளர் இராவணா பா. ஏகலைவன் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.


