முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடல் : பாரிஸில் அக்டோபர் 2 வேலைநிறுத்தம்!
போராட்டக்காரர்கள் மதியம் 2 மணிக்கு Place d’Italie என்ற இடத்திலிருந்து தங்கள் பேரணியைத் தொடங்கி, Place Vauban பகுதியை அடைவார்கள்.
பாரிஸில் அக்டோபர் 2 வேலைநிறுத்தம்: முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!
பாரிஸில் (ஒக்டோபர் 2, வியாழன்) இ ன்று நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால், நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என்று பாரிஸ் காவல்துறை தலைமைச் செயலகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பேரணியின் பாதை:
போராட்டக்காரர்கள் மதியம் 2 மணிக்கு Place d’Italie என்ற இடத்திலிருந்து தங்கள் பேரணியைத் தொடங்கி, Avenue des Gobelins, Boulevard Port-Royal, Boulevard de Montparnasse, Boulevard des Invalides மற்றும் Avenue de Villars வழியாகச் சென்று Place Vauban பகுதியை அடைவார்கள்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி ஐந்து முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
Les Gobelins: காலை 10 மணி முதல் மூடப்படும்.
Port-Royal, Invalides, Varenne, La Tour-Maubourg: இந்த நான்கு நிலையங்களும் மதியம் 12 மணி முதல் மூடப்படும்.
காவல்துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள்:
வாகன ஓட்டிகள் பாரிஸின் Rive gaucheபகுதியைக் காலைை 10 மணி முதலே முற்றிலுமாகத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பேரணி நடைபெறும் பாதைகளிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
எனவே, இன்று அக்டோபர் 2 அன்று பாரிஸில் பயணிக்கத் திட்டமிடும் மக்கள், தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதும், பொதுப் போக்குவரத்தின் நிலைகுறித்த அறிவிப்புகளைக் கவனிப்பதும் அவசியம்.


