கச்சதீவு திருவிழாவிற்காக 6000 க்கும் மேற்பட்ட இலங்கைப் பக்தர்கள்!
குறிகட்டுவான், நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, குறிகட்டுவான், காங்கேசன்துறை, நீர்கொழும்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து நேரடியாக பக்தர்கள் சென்றடைந்துள்ளார்கள்!
கச்சதீவு திருவிழாவிற்காக இம்முறை 6000 க்கும் மேற்பட்ட இலங்கைப் பக்தர்கள் பங்கேற்பு!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்காக இன்றைய தினம் (2026.02.27) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4439 பக்தர்களும், நெடுந்தீவிருந்து 450 பக்த்தர்களும், ஊர்காவற்றுறையிலிருந்து 434 பக்தர்களும் சென்றடைந்த நிலையில், இன்று இரவு குறிகட்டுவான் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து மேலும் 500 பக்தர்கள் சென்றடைவார்கள் என்பதுடன், நீர்கொழும்பு மற்றும் மன்னார் உட்பட ஏனைய மாவட்டங்களிலிருந்து நேரடியாகவும் பக்தர்கள் சென்றடைந்துள்ளார்கள் என்பதுடன், குறிகட்டுவான் வந்தடைந்த 4439 பக்தர்களும் கடற்படை மற்றும் தனியார் படகுகள் மூலம் கச்சதீவை சென்றடைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம் முறை 6000க்கும் மேற்பட்ட இலங்கை பக்த்தர்கள் செல்கிறார்கள் என்பதுடன், இந்தியாவிலிருந்து 3992 பக்த்தர்கள் சென்றடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


