1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் தமிழ் மக்களை முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் ஈவிரக்கமின்றி வெட்டிப் படுகொலை செய்தனர்.
ஓகஸ்ட் 11/ 12. வீரமுனைப் படுகொலைகள் நினைவு நாட்கள்.
ஓகஸ்ட் 11/ 12. வீரமுனைப் படுகொலைகள் நினைவு நாட்கள்.
முஸ்லிம்கள் தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலைகளை அவர்களும் தமிழீழ மக்கள் என்ற அடிப்படையிலும், நல்லெண்ணம் கருதியும் பேசாமல் இருப்பது வரலாற்றில் தேசக் கோட்பாட்டிற்குப் பெரும் குந்தகமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டிய இக்கட்டிற்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் ஈவிரக்கமின்றி வெட்டிப் படுகொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளைக் கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர்.
கிட்டத்தட்ட 400 தமிழர்கள் கொல்லப்பட்டும், வலிந்தும் காணாமலாக்கப்பட்டனர்.
முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் காடையர்கள் இன அழிப்பு அரசின் படைகளுடன் இணைந்து நடத்திய வீரமுனைப் படுகொலைகள் என்பது ஒரு “மினி முள்ளிவாய்க்கால்”.
தென் தமிழீழ மண்ணிலிருந்து தமிழர்களை வாழ்ந்த சுவடுகளே தெரியாமல் அழித்தொழிப்பு செய்து அதை முஸ்லிம் குடியிருப்புக்களாக மாற்ற நடந்த பல அழித்தொழிப்புக்களின் உச்சமாக அது நடந்தேறியது.
1990 ஓகஸ்ட் மாதம் இது நடக்கிறது.
புலிகள் இந்த அழித்தொழிப்பு நடந்து மூன்று மாதங்களின் பின்பே ஒக்டோபர் 30 முஸ்லிம்களை வட தமிழீழத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற முடிவெடுக்கிறார்கள்.
இந்த வரலாற்று செய்தியை பலர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறார்கள்.
இதன் வழி புலிகளுக்கு ஒரு இக்கட்டான நிலை திட்டமிட்டே இன அழிப்பு அரசின் புலனாய்வு வலையமைப்பால் உருவாக்கப்படுகிறது.
வட தமிழீழத்திலும் இன அழிப்பு அரசின் உதவியுடன் இப்படியான நில ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அது போராட்டத்தின் போக்கையே மாற்றி விடும் அபாயாம் உணரப்படுகிறது.
விளைவு தற்காலிக வெளியேற்றம்.
இந்த வெளியேற்றத்தின் பல தர்க்க நியாயங்களை பல தடவை அடுக்கி விட்டேன். சொல்லப்படாமல் இன்னும் நிறைய இருக்கிறது.
அதில் குறிப்பான ஒன்று கீழே..
தென் தமிழீழத்தில் முஸ்லிம்கள் ஆதரவுடன் தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்கள் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட புலிகள் மவுனமாக இருப்பதென்பதும் வட தமிழீழத்தில் புலிகள் அவர்களுக்கு அரணாக இருப்பதென்பதும் ஒரு பிரதேச வாத பிரச்சினையாக தென் தமிழீழ மக்களால் பார்க்கப்படும் ஒரு போக்கு உருவாகியது.
அதை தலைமைக்கு அறிவித்ததே இதே ” பிரதேசவாத”பிரச்சினையை பின்னாளில் கையிலெடுத்து போராட்டத்தைக் கூறு போட்ட கருணாதான்.
புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியிருக்காவிட்டால் ஒருவேளை அப்போதே பிரதேசவாத உடைப்பிற்கு புலிகள் முகம் கொடுத்து போராட்டம் நீர்த்துப் போயிருக்கலாம்.
இப்படி தவிர்க்க முடியாத பல நூறு காரணங்கள்.
ஆனால் எதையும் கணக்கில் எடுக்காமல் வரலாறு நெடுகிலும் புலிகளை குற்றவாளிகளாக்கும் போக்கு தொடர்வது வேதனை.
பரணி


