யாழ். பல்கலைக்கழகத்தின் இலக்கு மக்களைச் சென்றடையவேண்டும்! - பேராசிரியர் ரகுராம்
,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உண்மையான இலக்கை அடையவேண்டுமானால் அதனை ஒரு சமூக நிறுவனமாக மாற்றியாக வேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மக்களைச் சென்றைடைகின்றபோது தான் சிறந்த மாற்றத்தைப் பெறமுடியும் என்று கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பெயர்த்தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழின் ஒரு அடையாளமாகும். அது ஒரு சமூக நிறுவனமாக மாற்றப்படவேண்டும். அவ்வாறு அது ஒரு சமூக நிறுவனமாக மாற்றப்படும் போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் உண்மையான இலக்கினை அடைய முடியும். ஆனால் இன்று அந்தநிலை மாறி வெறுமனே ஒரு கல்வி நிறுவனமாக, ஆய்வுகளைச் செய்கின்ற நிறுவனமாக அந்த ஆய்வுகளை உலகளாவிய ரீதியில் பரப்பி விட்டு நிலைகொள்ளாமல் இருக்கக் கூடிய நிறுவனமாக அதுமாறியிருக்கிறது. இந்த மாற்றத்தை நாங்கள் தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது.
ஆகவே யாழ்ப்பாணப் பல்கலைக் ழகத்தை சமூக நிறுவனமாக மாற்றவேண்டும். உருவாக்கப்படவேண்டும். அதனுடைய வகிபங்கு என்பது அந்தப் பிரமாணத்தைப் பெறவேண்டும் என்றார்.


