ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே.
சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே ரவிராஜ் கொல்லப்பட்டார்.
ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்? ரவிராஜ் கொலைக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை?
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடியவரா? இல்லை
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாரா? இல்லை
ரவிராஜ் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தவராக குற்றம் சாட்டப்பட்டாரா? இல்லை
ரவிராஜ் ஒரு தேடப்பட்ட சந்தேக நபரா? அல்லது குற்றவாளியா? இல்லை
அப்படியாயின் ரவிராஜ் ஏன் இலங்கை அரசால் கொல்லப்பட்டார்?
கொல்லப்படும் அளவிற்கு ரவிராஜ் செய்த தவறுதான் என்ன?
ரவிராஜ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர் புலிகள் அமைப்பை ஆதரித்தார்.
புலிகள் அமைப்பை ஆதரித்தது தவறு என்றால் ஏன் மற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படவில்லை?
எல்லா தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகளின் ஆதரவுடன்தானே பதவியைப் பெற்றவர்கள்.
புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொன்ன சம்பந்தர் ஐயாவையல்லவா இலங்கை அரசு முதலில் சுட்டிருக்க வேண்டும்
ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே.
ரவிராஜ் பேச்சுகள் மூலம் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே அவர் கொல்லப்பட்டார்.


