சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும்...
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க்கின் மேற்கு வலயத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் கெர்சர்ஸின் மையத்திற்கு அருகிலுள்ள வீதியில் இடம்பெற்ற 6 பேர் உயிரிழந்ததுடள் 5 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம், விபத்தா, அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்தின் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இணுவிலை பூர்வீகமாககொண்ட இளைஞர் தினேஸ் கனகரத்தினம் (தவராசா) சாவடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


