தேடப்பட்டு வரும் HONDA மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்!
சந்தேகநபரை கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவியினை யாழ்ப்பாணம் பொலிசார் வேண்டி நிற்கின்றனர்.
தேடப்பட்டு வரும் சந்தேகநபரை கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவியினை யாழ்ப்பாணம் பொலிசார் வேண்டி நிற்கின்றனர்.
கடந்த 7ம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியசாலை வளாகத்தின் 06 ஆம் இலக்க வாயிலின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற HONDA மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதன்படி, குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்தாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேகநபர் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். .
தலைமையக பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி - யாழ்ப்பாணம்: 071-8591329
பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவு - யாழ்ப்பாணம் 071-2384310


