வரலாற்றை திரித்து பொய் கூறும் தற்போதைய இலங்கை சனாதிபதியின் சுத்துமாத்து பேச்சு அம்பலம்!
1996 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ணப் போட்டிகள் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரை இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்றது.
தற்போதைய இலங்கை சனாதிபதியின் சுத்துமாத்து பேச்சு அம்பலம்!
1996 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ணப் போட்டிகள் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரை இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்றது.
முதலாவது அரையிறுதிப் போட்டி இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையில் 13 ஆம் திகதி மார்ச் மாதம் இந்தியாவின் கொல்கத்தாவில் நடைபெற்றது. அதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. உலக கிண்ண இறுதிப்போட்டி மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் மார்ச் மாதம் 17 ஆம் திகதி பாக்கிஸ்தான் லாகுர் நகரில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்ரேலிய அணியினை வீழ்த்தி சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டது.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சனாதிபதி 1996 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் போட்டியின் போது போராளிகள் ஆயுதங்களை வைத்து விட்டு ஆயுதங்களின்றி கிரிக்கட் பார்த்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
அது உண்மையா ?
1996 ஆம் ஆண்டு உலககிண்ண கிரிக்கட் நடைபெற்ற காலப் பகுதியான பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரை போராளிகள் தமிழ் மக்களின் கவசங்களான ஆயுதங்கள் கொண்டு எந்த தாக்குதல்களையும் நடாத்த வில்லையா?
1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை அணி உலககிண்ணத்தினைக் கைப்பற்றியது அடுத்த நாள் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வந்த உதயன் பத்திரிக்கையில் அழிஞ்சுப்பொத்தானையில் நேற்று பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் என்ற தலைப்புச் செய்தியுடன் வெளிவந்திருந்தது.
அத்துடன் நேற்று இரண்டாவது நாளாக தென்மராட்சி, வடமாராட்சி பகுதிகள் மீது செல் தாக்குதல். என்ற செய்தியும் காணப்பட்டது. அதே நேரம் உலக கிண்ணம் சிறிலங்கா அணிக்கு என்ற ஒரு செய்தியும் காணப்பட்டது.
அன்றைய காலத்தில் விடு தலைப் பு லிகள் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதற்கு அப்பால் ஊடகங்கள் கூட அன்றைய காலத்தில் எந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தர்கள் என்ற புரிதல் அரச தலைவர் உட்பட சிலருக்கு வரவேண்டிய தேவையிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் விளையாட்டினை மட்டுமல்ல கல்வி, கலை, பண்பாடு, சட்டம் ஒழுங்கு எல்லாவற்றையும் நேசித்தார்கள் மேம்படுத்தினார்கள். ஆனால் தமிழினத்தின் தன்மான இனவிடுதலையினை சுவாசித்தார்கள்.
இன்று நேற்றல் இலங்கையில் காலடி வைத்த நாள் முதல் பொய்புனைவுகளோடு வரலாற்றுத் திரிபுகளை திட்டமிட்டு செய்து வருகின்றது சிங்களம். சான்றாக மகாவம்சம் இடைச் செருகலோடு பலமுறை திருத்தி எழுதப்பட்டதைக் காணலாம்.


