கற்கள் கருவியானதுதான் உலகின் முதல் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் ஆகும்!
.
முதன் முதலாக நான்கு கால்களில் இருந்து, இரண்டு கால்களுக்கு மாறிய பின்னர் விலங்கு மனிதனாக உருப்பெற்றது, கற்களை கருவிகள் ஆக்க துவங்கிய போதுதான். அவ்வாறாக கற்கள் கருவியானதுதான் உலகின் முதல் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் ஆகும்! அதுதான் அந்த வேட்டைச் சமூகம்.
ஆதிமனித இனம் நீடித்து நிலைத்திருக்க, புதிதாக ஒன்றை கற்க வேண்டிய அவசியமும், கூட்டாக வாழ வேண்டிய கட்டாயமும் பிறந்தது.அப்படியான புதிய புத்தாக்க சிந்தனையும், கூட்டு வாழ்வும், மனித மூளையை விலங்குகளிடமிருந்து பன்மடங்கு பெரிதாக்கியது. அதைத்தான் 'Social Brain' என்கிறோம். (Read: Robin Dunbar) அங்கேதான், அதாவது, அந்த மூளை அளவின் மாற்றம் நிகழ்ந்த பின்தான் தன்னையொத்த அனைத்து விலங்குகளிடமிருந்து (உயிர்களிடமிருந்தும்) வேறுபட்டு, அசைக்க முடியாத மகத்தான ஆற்றலாக மனிதன் மாறுகிறான்.
அந்த 'Social Brain' கூட்டு வாழ்வை மேலும், மிகவும் திடப்படுத்துகிறது, மூளையில் மொழிக்கான பாகங்கள் விரிவடைகின்றன. மொழி பிறக்கிறது, மொழியின் மூலம் பண்பாடு பிறக்கிறது.ஒரு இனக் கூட்டம்-ஒரு மொழி-ஒரு பண்பாடு-ஒரு தேசிய இனம் எல்லாம் அந்த சமூக-உயிரியல் சங்கிலி தொடர்தான்.
கற்களை கருவிகளாக படைத்ததுதான் (tool making) மனித வரலாற்றின் முதல் தொழில்நுட்பம். அதுதான் மானுட பரிணாம பாய்ச்சலை புரட்சிகரமாக்கியது. கற்களை கருவிகளாக பயன்படுத்தி, உணவை பெறவும், வேட்டையாடவும் கற்கிறான். கற்கருவிமுதலில் உருண்டையாக, பின்னர்