மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்! இராவணா வலையொளி ஊடகவியலாளர் பா.ஏகலைவன்.
சப்தமின்றி ஒரு வாக்கு புரட்சி என்பார்களே அப்படி நடந்துள்ளது. ஆனால் இது உண்மையான புரட்சியா?
மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்! இராவணா வலையொளி ஊடகவியலாளர் பா.ஏகலைவன்.
விஜய் கட்சிக்கு தொகுதிகளே வாய்ப்பில்லை என்றே கூறி வந்தேன். 100-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைத்துள்ளது. மக்கள் தீர்ப்பை மதிக்கின்றேன். சீமான் மற்றும் நாம் தமிழர் தம்பி தங்கைகளின் கடும் உழைப்பிற்கு மக்கள் உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. இதற்காக வருத்தப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. மக்கள் மற்றும் அனைத்து தரப்பு ஊழியர்கள் என எல்லோரது போராட்டக் களங்களிலும் முன்னின்ற சீமானை இப்படி புறக்கணித்திருக்ககூடாது.
இதை உணரும் காலம் விரைவில் வரும்.
அடுத்து, இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம், திமுக-வின் உச்சகட்ட அராஜக-சுரண்டல் கொள்ளை ஏதேனும் ஒரு முடிவை கட்டியாக வேண்டும் என்பதை மக்கள் ஆவேசம் கொண்டு முடிவெடுத்திருப்பதை காட்டுகிறது. ‘மாற்று’ என்ற இடத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கமாட்டார், ஸ்டாலின் குடும்ப ஆட்சியை வலுவாக எதிர்க்க-ஒழிக்க மாட்டார் என்கிற முடிவில் மக்கள் இறங்கி இருக்கிறார்களோ என்ற என்னமும் ஏற்படுகிறது. அப்படி ஒரு நம்பிக்கையை விஜய் மீது வைத்திருக்கிறார்கள். சப்தமின்றி ஒரு வாக்கு புரட்சி என்பார்களே அப்படி நடந்துள்ளது. ஆனால் இது உண்மையான புரட்சியா? சினிமா கவர்ச்சி வசனங்களுக்கானதா என்பதை விஜய் செயலில் காட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்கிற விஜயின் ‘பழைய அழைப்பு’ நடை முறைக்கு வரலாம். காரணம் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை. அதை தொடும் வாய்ப்பு குறைவு. பெரும்பான்மை உள்ள கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். விஜய்க்கு தான் அந்த வாய்ப்பு. ஆட்சியமைத்த பிறகு 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். போதாது 30 நாள் அவகாசம் என்று கோரப்படலாம்.
அந்த முப்பது நாட்களுக்குள்
ஏற்கனவே திமுக மீது அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளையும், கூடவே பாட்டாளி மக்கள் கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடலாம். அமைச்சர் பதவி உறுதி, ஆட்சியில் பங்கு என்ற வார்த்தை இவர்களுக்கு சரியானதாகவும்-ஜனநாயகமாகவும் படலாம். அதன் பேரில் விஜய் கட்சிக்கு ஆதரவு என்றால், தவெக நிரந்தரமாக ஆளும் கட்சியாகிவிடும். மேற்சொன்ன (கூட்டணிக்கு போகும்-ஆதரவு தெரிவிக்கும்) கட்சிகளும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு தங்களை மேலும் வளர்த்துக் கொள்ளலாம்.இதுதான் இப்போதைக்கு சொல்லக்கூடிய கருத்துகள். என இராவணா வலையொளி ஊடகவியலாளர் பா.ஏகலைவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


