தாக்குதலுக்கு தயாரான கும்பல் போதை மாத்திரைகளுடன் அதிரடியாக கைது!
,
தாக்குதலுக்கு தயாரான கும்பல் போதை மாத்திரைகளுடன் அதிரடியாக கைது செய்த சுன்னாகம் பொலிஸார்!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் மற்றும் போதைப் மாத்திரைகளுடன் இருவர் இன்றையதினம் வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடாத்துவதற்கு தயாரிகினர். இருவர் போதை மாத்திரைகள் உடமையில் இருந்த குற்றச்சாட்டிலும் இவை குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தவகையில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்த தாக்குதலை முறியடித்து குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் மூன்று வாள்களுடன் இருவரை போதை மாத்திரைகளுடனும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை சுன்னாகாம் பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


