நடுத்தெருவுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள்!
பிரான்சில் இன்றுடன் முடிவுக்கு வரும் வாடகைதாரர்களுக்கான பாதுகாப்பு!
நடுத்தெருவுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள்: பிரான்சில் இன்றுடன் முடிவுக்கு வரும் வாடகைதாரர்களுக்கான பாதுகாப்பு!
பிரான்ஸில் வாடகை செலுத்தாதவர்களைக் குளிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையிலான 'குளிர்காலக் காலக்கெடு' (Trêve hivernale) இன்றுடன் (மார்ச் 31) முடிவுக்கு வருகிறது. நாளையிலிருந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழக்கும் பேராபத்து உருவாகியுள்ளது!
கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் சாதனை அளவாக 30,500 குடும்பங்கள் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இது 2016-ஆம் ஆண்டை விட இருமடங்கு அதிகமாகும்!
முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பச்சிளங் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் கூட ஈவிரக்கமின்றி வெளியேற்றப்படுவது சமூக ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஒருபுறம் விலைவாசி உயர்வும், வறுமையும் மக்களை வாட்டி வதைக்கின்றன. மறுபுறம், 2023-இல் அரசு கொண்டுவந்த கடுமையான புதிய சட்டங்களால் (Loi Kasbarian), வாடகை செலுத்தச் சிறிது கால அவகாசம் வழங்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கே கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அரசின் புதிய திட்டங்கள், வாடகை செலுத்த முடியாத ஏழைகளைச் 'சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களோடு' ஒப்பிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. "உணவு, தங்குமிடம், குளிர் காய்வது... இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற இக்கட்டான நிலைக்கு எந்தவொரு மனிதரும் தள்ளப்படக் கூடாது," என மனித உரிமை அமைப்புகள் அரசை வலியுறுத்தியுள்ளன.
- சிவா சின்னப்பொடி


