சீமான் என்கிற பெயர் அவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கின்றது.
பெரியார் சட்டியை உருட்டிக் கொண்டிருக்கும் ’பெரியார் மட’ மடாதிபதி ஐயா கி.வீரமணி!
மாட்டுக் கோமியம்யாருக்கெல்லாம் போகும்?
எப்போதெல்லாம் ஸ்டாலின் வகையறாவுக்கு சறுக்கல் வருகிறதோ, நெருக்கடி வருகிறதோ,அப்போதெல்லாம் அதை மடைமாற்ற இந்த ஒட்டுத் திண்ணை வகையறா களம் இறங்கிவிடும்.
‘சீமான் வீட்டுக்கு மாட்டுக் கோமியத்தை’ அனுப்பி வைப்போம் என்ற புலம்பலும் அப்படித்தான்.
போகிற இடத்தில் எல்லாம், சீமான் மரண பங்கம் செய்து வருகிறார், எடப்பாடி பழனிசாமி போட்டு பொளந்து கட்டுகிறார். ஸ்டாலின் தரப்பிற்கு பதில் சொல்ல முடியவில்லை. நேற்றுகூட மீஞ்சூர் அருகே வீட்டு மாடியில் இருந்த கல்லூரி மாணவி, நான்கு போதை இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மிதமிஞ்சிய கஞ்சா போதை. கிராமம் வரையிலும் திராவிட மாடலின் போதைக் கலாச்சாரம் பரவியுள்ளது. போகிற இடத்தில் எல்லாம் NTK–வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஊடகங்கள் விவாதிக்க ‘மறந்தாலும்’ மக்கள் மத்தியில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத’ மாடல் அரசு என்கிற விவாதம் தீயாய் எழுந்துவிட்டது. அடுத்து 8000 ரூபாய் டோக்கன் விடயத்தில் ஒரு பெண்மணி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒன்றுக்கும் உதவாத அந்த 8000 ரூபாய் டோக்கன் சீட்டால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இது நன்றாகவே எதிரொலிக்கின்றது. தேர்தல் ஆணையமும் திமுகவை கண்டிக்கின்றது. தமிழ்நாடு முழுதும் இது சர்ச்சையாகி உள்ளது. திமுகவின் பித்தலாத்தை மக்களே பேசத் தொடங்கியுள்ளார்கள்.
அதிமுக்கிய பிரச்சனை, சீமானுக்கு போகிற இடங்களில் எல்லாம் பெருங்கூட்டம்…பெருங்கூட்டம். நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே வருகிறது என்பதுதான். தலைக்கு 500 ரூபாய் கொடுத்து கூட்டி வரும் திமுக தரப்பிற்கு இது பெரும் எரிச்சலாக உள்ளது. அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எதையாவது செய்து மடை மாற்ற முடியுமா என்பதே அவர்களின் இரவு நேர புலம்பல்.
அதாவது மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கும் ’சீமானுக்கு பெருங்கூட்டம்’ என்பதை மடை மாற்றியாக வேண்டும்.
இதோடு அம்பலப்பட்டு இருக்கும் அரசியல் கள்ள உறவு வேறு. கர்நாடக அரசுக்கும் நமக்கும் தண்ணீர் பஞ்சாயத்து நெருப்பாய் இருந்து வருகிறது. எந்த சட்ட திட்டங்களையும் அவன் மதிப்பதில்லை. தமிழ்நாடாவது டேஷாவது என்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு., ‘மேகதாட்டு அணை கட்டியே தீருவோம்’, முடிந்ததை பார்ப்போம் என்றார் கர்நாடக துணை முதல் அமைச்சர் டி.கே.சிவகுமார். அந்த சிவகுமாருடன் உடன் அறிவாலய மாப்பிள்ளை வலம் வருகிறார். திராவிட மாடல் ஸ்டாலினுக்கும் அவர் செல்லப்பிள்ளை. கேட்டால் ‘காங்கிரஸ் கூட்டணி கட்சி’ என்கிறார்கள்.
ஆக நமக்கு துரோகம் செய்பவனுடன் கைகோர்த்து வணிகம் செய்து கொண்டிருக்கும் இந்த திமுக, மீண்டும் ஆட்சிக்கு வந்து நமக்கான தண்ணீர் உரிமையை மீட்டுக்கொடுப்பார்கள் என எப்படி நம்புவது? என விவசாய மக்களிடமும், பொது மக்களிடமும் கேள்வியாக எழுந்துள்ளது. (நமக்கு துரோகம் செய்பவனோடு மட்டுமே கள்ள உறவும்–நல்ல உறவும் வைத்திருப்பார்கள், தமிழர்களுக்கு எதிராக). தமிழர்களுக்கு இரண்டகம் செய்யும் இந்த கும்பலின் குடும்பம் ‘கர்நாடகத்தோடு வணிக ஒப்பந்தங்களை’ வைத்துக்கொண்டிருக்கவும், நீடித்துக் கொண்டிருக்கவுமே விரும்புகிறார்கள். இவர்கள் எப்படி உரிமைகளை தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை கொடுப்பார்கள் என்பதே மக்களின் கேள்வி– விவாதப் பொருள்.
இதை எல்லாம் மடை மாற்ற உடனே ஒட்டுத் திண்ணைகளுக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த ஒட்டுத் திண்ணை கும்பலும், ‘சீமான் வீட்டுக்கு மாட்டுக் கோமியத்தை அனுப்பி வைப்போம் என்கிறது. (17ம் தேதிதான் மாடு நிறைய கோமியம் இடுமாம்) காரணம் சீமான் சங்கர மட கோயிலுக்கு போய்விட்டாராம். அங்கிருக்கும் மாடுகளுக்கு புல்லு கொடுத்தாராம். தமிழை நீஷ பாஷை என்ற சங்கர மடத்தின் கோயிலுக்கு சீமான் எப்படி போகலாம் என்கிறார்கள். அதற்காகதான் மாட்டுக் கோமியத்தை அனுப்ப போகிறோம் என்கிறார்கள்.
அதுவும் கடந்த மாதம் நடந்த சம்பவம் இது. காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு செல்லவில்லை சீமான். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள சங்கரமடத்தின் ஒரு கோயிலுக்கு ஆழைப்பின் பேரில் சென்றிருந்தார். ஒரு மாதம் கழித்துதான் ஒட்டுத் திண்ணைகளுக்கு தெரிந்தது போல கொதிக்கிறார்கள். காரணம் மேலே சொன்னைவைதான். ‘மடை மாற்று–மடை மாற்று’. எரியுதடி மாலா, ஃபேன போடு என்ற ரகம்…
தமிழை நீஷ பாஷை என்ற சங்கர மடம்–என்கிறது ஒட்டுத் திண்ணை.
ஈ.வெ.ராமசாமி நாயக்கரும்தான் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று விதம் விதமாக பேசி அவமதித்தார். அவருக்கு எந்த கோமியத்தை அனுப்புவது–எதனால் அடிப்பது? அமைச்சர்கள் சேகர்பாவும், காந்தியும் சங்கரமடத்தில் ஆசிவாங்க சென்றார்களே–அவர்களுக்கு எந்த கோமியத்தை அனுப்புவது? சென்னை மாம்பலத்தில் உள்ள அதே சங்கரமட கோயிலுக்கு அந்த பகுதியின் திமுக விஜபி, ராஜா அன்பழகன் சென்று மாலை மரியாதை பெற்றாரே– அவருக்கு எந்த கோமியத்தை அனுப்புவது.
‘கருணாநிதி மகன் ஸ்டாலின் என்னை வந்து சந்தித்துவிட்டுப் போவான்’ என்று சங்கரமட பெரியவர் ஜெயேந்திரர் சொன்னாரே, அந்த ஸ்டாலினுக்கு எந்த கோமியத்தை அனுப்புவது? கருணாநிதி, ஆர் எஸ் எஸ் அமைப்பை பாராட்டி பேசி, பாஜகவுடன் நல்ல உறவு வைத்துக்கொண்டிருந்தாரே, அது எந்த கோமியத்தில் வரும்? திமுக குடும்ப மாப்பிள்ளையும், அமித்ஷாவின் மகனும் வணிக நட்பில் அரசியல் ஆதாயத்தை அடைந்து வருகிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சொன்னது எந்த கோமியத்தில் சேரும். எல்லாவற்றிற்கும் மேலாக, அம்மையார் துர்கா ஸ்டாலின் அவர்கள் மாட்டுக் கோமியத்திற்கு பூஜை நடத்தினாரே–அவருக்கு எந்த கோமியத்தை அனுப்பப் போகிறீர்கள்.
இவற்றை எல்லாம் அனுமதித்துக் கொண்டு இன்னமும் பெரியார் சட்டியை உருட்டிக் கொண்டிருக்கும் ’பெரியார் மட’ மடாதிபதி ஐயா கி.வீரமணி அவர்களுக்கு எந்த கோமியத்தை அனுப்பி வைப்பீர்கள்? இதற்கெல்லாம் திமுகவிடமும், ஒட்டுத் திண்ணைகளிடமும் பதில் இருக்காது. தனிமனித தாக்குதலில் இறங்குவார்கள். பெரியாரிடம் கற்ற பாடமும், வளர்ப்பும் அப்படி தான் இருக்கும். சீமான் என்கிற பெயர் அவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கின்றது.
பா.ஏகலைவன்,பத்திரிகையாளர்.
16.04.26


