வெற்றிப் பிரகடனத்துடன் போரை நிறுத்துவதற்கு எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமெரிக்க CIA அதிகாரி !
இந்த நடவடிக்கைக்காக 155 விமானங்கள் களத்தில் ஈடுபடுத்தப் பட்டிருந்தது.
இறுதி இலக்கை அடைந்துஇ வெற்றிப் பிரகடனத்துடன் போரை நிறுத்துவதற்கு எடுத்த முயற்சி ?
விமானியை மீட்கிறோம் என்ற போர்வையில் இஸ்பஹான் மற்றும் நட்டான்ஸ் ஆகிய பிரதேசங்களில் உள்ள அனுசக்தி நிலையத்துக்குள் அதிரடியாக புகுந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை திருடிய பின்பு அணு நிலையத்தை முற்றாக அழிப்பதற்கான சிறப்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமெரிக்க ஊஐயு அதிகாரி கூறியுள்ளார். இதே கருத்தினையே ஈரானும் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்காக 155 விமானங்கள் களத்தில் ஈடுபடுத்தப் பட்டிருந்தது. கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பிரமாண்டமாக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் எவ்வாறு இருந்திருக்கும்?
ஈரானிய இராணுவ நிலைகள் மீது ஒரு அணியினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கஇ வேறு இடங்களில் இருந்து உதவிக்கு வருவதனை தடுக்கும் நோக்கில் இன்னுமொரு அணியினர் வீதிகளை உடைத்து தடுத்துக்கொண்டிருக்கஇ விசேட படையினர் அணு உலைக்குள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். அத்தனை முயற்சியையும் தடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் முழு பலத்தினையும் பாவித்த இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதன் காரணமாகவே ஈரானிய படையினர் திறமையானவர்கள் என்று தன்னை அறியாமலேயே ட்ரம்ப் கூறியுள்ளார். இவ்வாறான நடவடிக்கை தோல்வியடைந்தால்இ அது அமெரிக்காவுக்கு பாரிய அவமானமும்இ தலைக்குணிவும் ஏற்படும் என்ற காரணத்தினாலேயே விமானியை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை வெற்றியடைந்திருந்தால்இ வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை கடத்திய பின்பு கொண்டாடியது போன்று வெற்றி கொண்டாட்டம் முழங்கியிருக்கும். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றி எமது இலக்கை அடைந்துள்ளோம்இ போரில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளோம் என்ற அறிவிப்புடன் டொனால்ட் ட்ரம்இ ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பார். எனவே இஸ்பஹான்இ நட்டான்ஸ் அணு உலைகளை தகர்க்கும் முயற்சி பாரிய தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்த தோல்வியினால் ஏற்பட்ட மன விரக்தியின் பிரதிபலிப்புத்தான் அநாகரிகமான சொற்களுடனான ட்ரம்பின் சமூக வலைத்தள பதிவாகும். (இது முகம்மத் இக்பால் அவர்களின் பதிவு)
இது ட்ரம் தரப்பின் வழக்கமான செய்தி! ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானிகளை மீட்கச் செய்யப்பட்ட பிரம்மாண்டமான ராணுவ நடவடிக்கை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்இ ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார். வெள்ளை மாளிகைக்கு எதிரான விமர்சனங்களை முறியடித்துஇ தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது.
150 வானூர்திகளும் சிறப்புப் படைகளும்: ஏப்ரல் 2-ஆம் திகதி நள்ளிரவில் ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 'எஃப்-15' (கு-15) போர் விமானத்திலிருந்துஇ பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிய இரண்டு விமானிகளையும் பத்திரமாக மீட்க இரண்டு மாபெரும் ராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்ட வானூர்திகளும்இ தரைப்படைச் சிறப்பு அதிரடிப்படையினரும் (ளுpநஉயைட குழசஉநள) ஈடுபடுத்தப்பட்டு ஒரு மாபெரும் தந்திரோபாய வெற்றி ஈட்டப்பட்டுள்ளது.
'யாரையும் கைவிடுவதில்லை' என்ற கொள்கை: ஈரானுக்கு எதிரான தற்போதைய போர் உத்திகள் குறித்துப் பல சந்தேகங்கள் எழுந்துள்ள போதிலும்இ அமெரிக்க ராணுவத்தின் முக்கியக் கொள்கையான 'எந்தவொரு வீரரையும் போர்க்களத்தில் அனாதையாகக் கைவிடுவதில்லை' (ழே அயn டநகவ டிநாiனெ) என்பதைத் ட்ரம்ப் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தியுள்ளார்.
உயர் அதிகாரிகளின் எதிர்ப்பும் ட்ரம்பின் துணிச்சலும்: இந்த மீட்பு நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்பதால்இ அமெரிக்க ராணுவத்தின் சில உயர் அதிகாரிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களைக் கடுமையாகச் சாடிய ட்ரம்ப்இ தனது 'ஆபத்தான மற்றும் துணிச்சலான' முடிவாலேயே இந்த மீட்புப் பணி சாத்தியமானது எனப் பெருமிதம் தெரிவித்தார். மேலும்இ வார இறுதியில் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகம் செய்த மகத்தான சாதனைகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
- சிவா சின்னப்பொடி


