வெற்றுக்கனவாகும் அமெரிக்காவின் பாதுகாப்பு அரண்: ஈரானுடனான போரால் தைவானுக்கு ஆபத்து?
அமெரிக்காவின் "உலகப் போலீஸ்" என்ற பிம்பம் இப்போது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
வெற்றுக்கனவாகும் அமெரிக்காவின் பாதுகாப்பு அரண்: ஈரானுடனான போரால் தைவானுக்கு ஆபத்து?
வாஷிங்டனில் இருந்து இன்று (ஏப்ரல் 24, 2026)வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (Wall Street Journal) வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் புலனாய்வுச் செய்தி, அமெரிக்காவின் உலகளாவிய பாதுகாப்பு அரணைப் பலவீனப்படுத்தியுள்ள ஒரு கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஈரானுடனான போரில் தனது ஆயுதக் கிடங்குகளை அமெரிக்கா மிக வேகமாகத் தீர்த்து வருவதால், தைவானைப் பாதுகாக்கும் அதன் திறன் கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28 முதல் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்கள், அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகளைக் காலி செய்து வருகின்றன. இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால், ஒருவேளை சீனா இப்போது தைவான் மீது போர் தொடுத்தால், அமெரிக்காவால் அதனைத் தடுக்க முடியாது என அந்நாட்டு உயர் அதிகாரிகளே அச்சம் தெரிவித்துள்ளனர்.
மாயமாய் மறைந்த ஏவுகணைகள்: திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்
கடந்த சில வாரங்களில் மட்டும் அமெரிக்கா பயன்படுத்தியுள்ள ஏவுகணைகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது: டோமாஹாக் (Tomahawk): சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. வான் பாதுகாப்பு ஏவுகணைகள்: 1,500 முதல் 2,000 வரையிலான தேட் (Thaad), பேட்ரியாட் (Patriot) மற்றும் எஸ்.எம் (Standard Missile) ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இழப்பை ஈடுகட்ட எவ்வளவு காலம் ஆகும்?
அமெரிக்காவின் தற்போதைய உற்பத்தி வேகத்தின்படி, காலி செய்யப்பட்ட இந்த ஆயுதக் கிடங்குகளை மீண்டும் நிரப்பக் குறைந்தது ஆறு ஆண்டுகள் ஆகும் என 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (Wall Street Journal) எச்சரித்துள்ளது.
ஆயுதக் கிடங்கில் எஞ்சியது எவ்வளவு?
மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அமெரிக்காவின் கையிருப்பில் இருந்த முக்கிய ஏவுகணைகளில் பெரும் பகுதி தீர்ந்துவிட்டன: தேட் (Thaad): 80 சதவீதத்திற்கும் அதிகமான ஏவுகணைகள் காலி. பேட்ரியாட் (Patriot): 66 சதவீதத்திற்கும் அதிகமானவை பயன்பாட்டில் தீர்ந்துவிட்டன.
எஸ்.எம்-3 (SM-3): சரிபாதி (50%) ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுவிட்டன.
ஜெலென்ஸ்கியின் எள்ளி நகையாடல்: "இது வேடிக்கையானது!"
ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்ற உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் இந்த நிலையை விமர்சித்துள்ளார். "அமெரிக்கா ஒரு மாதத்திற்கு வெறும் 60 முதல் 65 பேட்ரியாட் ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்கிறது. இது மிகவும் அற்பமானது. மத்திய கிழக்கில் போர் தொடங்கிய முதல் நாளிலேயே, அமெரிக்கா தனது இரண்டு ஆண்டுகால உழைப்பிற்குச் சமமான ஏவுகணைகளைத் தீர்த்துவிட்டது," என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் போரில் டிரம்பை வழிநடத்தும் 'நிழல் மனிதர்கள்' (Handlers) மற்றும் ராணுவத் தொழில் கூட்டமைப்புகள் (Military-Industrial Complex) ஒருபுறம் லாபம் பார்த்தாலும், அமெரிக்காவின் "உலகப் போலீஸ்" என்ற பிம்பம் இப்போது பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. ஈரானை ஒடுக்குவதாக நினைத்து அமெரிக்கா தனது சொந்தக் கைகளையே பலவீனப்படுத்திக் கொண்டுள்ளது.


