பெண்கள் விஜயின் நடத்தைக்கு எவ்வாறு தங்களது பிரதிபலிப்பை வெளிப்படுத்தப் போகிறார்கள்!
தமிழ்நாட்டில் படிப்பறிவுடையவர்களின் வீதமும் கைத்தொழில்மய மட்டமும் உயர்வானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் பழக்க வழக்கங்களிலும் பண்புகளிலும் அடிப்படையில் பழமைவாதச் சிந்நனையைக் கொண்டர்களாக இருக்கிறார்கள்.
பெண்கள் விஜயின் நடத்தைக்கு எவ்வாறு தங்களது பிரதிபலிப்பை வெளிப்படுத்தப் போகிறார்கள்!
விஜயின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனைவி சங்கீதா விவாகரத்து கோரும் நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனியாக தேர்தலுக்கு முகங்கொடுக்கிறது. தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. சட்டசபையின் 234 தொகுதிகளிலும் வாக்களிப்பு 2026 ஏப்ரில் 23 ஆம் திகதியும் வாக்கு எண்ணாக்கை மே 4 ஆம் திகதியும் இடம் பெறவிருக்கின்றன. தமிழ்நாட்டு வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடி. அவர்களில் ஆண்கள் 2.77 கோடி, பெண்கள் 2.89 கோடி, மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த 7,617 வாக்காளர்களும் இருக்கிறார்கள்.
இந்தியா எமது நெருங்கிய அயல்நாடு. இந்தியாவின் மாநிலங்களில் 7கோடி 20 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட தமிழ்நாடுதான். இலங்கைக்கு மிகவும் நெருக்கமாக அமைந்திருக்கும் மாநிலமாகும். தமிழ்நாடும் இலங்கையும் பூகோள ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பின்னிப் பிணைந்தவையாகும்.
அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுப்போக்குகள் இலங்கை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அதனால் தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகள் இலங்கைக்கு பெருமளவுக்கு முக்கியத்துவம்
வாய்ந்தவையாக இருக்கின்றன.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தாபகத் தலைவரான பிரபல நடிகர் விஜயும் தேர்தலில்போட்டியிடுகின்றார். வேறு எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனது கட்சி தனியாக தேர்தலுக்கு முகங்கொடுப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். இலங்கையில் பெருமளவு இரசிகர்களைக் கொண்ட விஜய் இலங்கையில் பிறந்தவரான சங்கீதாவை திருமணம் செய்தவர். இத்தகைய பின்புலத்தில் இந்த பத்தி எதிர்வரும் தமிழ்நாடு தேர்தல் பற்றி குறிப்பாக விஜய் பற்றி கவனம் செலுத்துகிறது.
1967. ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு திராவிடக் கோட்பாடு என்று சொல்லப்படுகின்ற போக்கைக் கடைப்பிடிக்கின்ற அரசியல் கட்சிகளினால் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. திராவிட முன்னேற்றக் கழகமும் அதற்கு மாற்றான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மாறிமாறி மாநிலத்தில் அதிகாரத்தை அனுபவித்து வருகின்றன.
2021 தேர்தலும் அதே பாணியிலேயே அமைந்தது. முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் தலைமையிலான தி.மு.க. எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அண்ணா தி.மு.க. வை தோற்கடித்தது. 2011 ஆண்டில் இருந்து பத்து வருடங்களாக அண்ணா தி.மு.க. மாநிலத்தை ஆட்சி செய்தது.
2021 தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 ஆசனங்களில் வெற்றி பெற்ற அதேவேளை, அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 75 ஆசனங்களைக் கைப்பற்றியது. வேறு எந்தவொரு கட்சியோ அல்லது கூட்டணியோ ஒரு ஆசனத்தைக் கூடப் பெறவில்லை. திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு மூன்றாவதாக வந்தது. 30 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அந்த கட்சியினால் பெறக்கூடியதாக இருந்த போதிலும், சட்டசபைக்கு ஒரு உறுப்பினர் கூட தெரிவு செய்யப்படவில்லை.
2026 சட்டசபை தேர்தலுக்கான. வேட்புமனுத் தாக்கல் ஏப்ரில் 7 ஆம் திகதி முடிவடையவிருக்கிறது.பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்ற தொகுதிகள் மற்றும் அந்த கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் அப்போதுதான் தெரிய வரும். அதற்குப் பின்னர் மாத்திரமே விரிவானதும் கூர்மையானதுமான ஆய்வு சாத்தியமாகும்.
நான்கு முனைப்போட்டி
ஆனால், 2026 தேர்தல் 2021 தேர்தலின் வழியிலேயே அமையும் என்பதை ஒரு பூர்வாங்க நோக்கு காட்டுகிறது. தமிழ்நாட்டு தேர்தல் பெருமளவுக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையிலான போட்டியாக அமையக்கூடிய சாத்தியமே இருக்கிறது. இருந்தாலும், வேறு இரு கட்சிகளும் கூட 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதால் நான்கு முனைப் போட்டியாக நிலவும் என்று பல அவதானிகள் கூறுகிறார்கள். ஒன்று சீமானின் நாம் தமிழர் கட்சி, மற்றையது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்.
சில அவதானிகள் தேர்தலை தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அண்ணா தி.மு க. தலைமையிலான கூட்டணி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான மும்முனைப் போட்டியாக நோக்குகிறார்கள். சீமானின் கட்சி 2021 தேர்தலில் 8 சதவீதமான வாக்குகளைப் பெற்று மூன்றாவதாக வந்த போதிலும் கூட, அதை இந்த அவதானிகள் கருத்தில் எடுக்கவில்லை.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இதுவரையில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதால் அதன் செல்வாக்கு இன்னமும் பரீட்சிக்கப்படவில்லை. என்றாலும் அந்த கட்சிக்கு ஊடகங்கள் பெருமளவில் முக்கியத்துவத்தைக் கொடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஊடகங்களில் சில பிரிவுகள் தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றிபெறக்கூடிய. சிறந்த சாத்தியத்தைக் கொண்டதாகவும் நிலைவரங்கள் குழப்பிவிடக்கூடியதாகவும் காண்பிக்கின்றன.
பல கருத்துக் கணிப்புகளும் ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றின் முடிவுகள் பொதுவில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அனுகூலமானவையாகவே இருக்கின்றன. விஜய் உரையாற்றுகின்ற கூட்டங்களுக்கு பெருமளவில் மக்கள் பிரதானமாக இரசிகர்களை திரளுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் உரையாற்றிய கூட்டத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் 41 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகால அனுபவமுடைய கொண்ட மூத்த தலைவர்களைக் கொண்டவையும் பல வருடங்களாக அரசியலில் இருக்கின்றவையுமான பாரம்பரிய அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்நோக்குகின்ற அதேவேளை, அரசியலுக்கு புதியவரான விஜயும் அவரது புதிய கட்சியும் பெரும்பாலும் ஊடக வெளிச்சத்திலேயே திளைத்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று திரைப்பட நட்சத்திரத்தின் தனிப்பட்ட செல்வாக்கு. மற்றையது மாநிலத்தில் 59 வருடகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மக்களில் சில பிரிவினர் மத்தியில் காணப்படும் ஆர்வம். ஏப்ரில் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலின் இறுதி முடிவுகள் என்னவாக இருந்தாலும், விஜயின் அரசியல் பிரவேசமும் அவர் தொடங்கிய கட்சியும் தமிழ்நாட்டு அரசியல் வானத்தை பிரகாசமடையச் செய்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் விஜய்
உலகில் விஜய் என்று அறியப்படும் சந்திரசேகர் ஜோசப் விஜய் தற்போது தமிழ்ச் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார் என்று சொல்லலாம். நயநாகரிகமான மூத்த நடிகர் ரஜினிகாந்த் தமிழ்ச் சினிமாவின் தனியான சூப்பர். ஸ்டாராக நீண்டகாலமாக அங்கீகாரத்தைப் பெற்றிருந்த போதிலும், அண்மைக் காலங்களில் அந்த நிலை மாறி விட்டது. மக்கள் செல்வாக்கு மற்றும் சந்தை மதிப்பைப் பொறுத்தவரை, 2025 ஜூன் 22 தனது 51 வது பிிறந்த தினத்தைக் கொண்டாடிய விஜய் அதே வருடம் 75 வது பிறந்ததினத்தைக் கொண்டாடிய ரஜினிகாந்தை விடவும் மேல் நிலையில் இருக்கிறார்.
சங்கீதா — சுழிபுரம்
விஜயின் தந்தையார் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார் புகழ்பெற்ற பாடகி ஷோபா சந்திரசேகர். இலங்கையில் பெரிய இரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான சங்கீதா சொர்ணலிங்கத்தை திருமணம் செய்தார். சங்கீதா யாழ்ப்பாணத்தில் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது அவர் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு. பிரஜை. அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற ஒரு மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.
விஜயும் சங்கீதாவும் 27 வருடங்களுக்கு முன்னர் 1999 ஆகஸ்ட் 25 ஆம் திகதி சென்னையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்னதாக தம்பதியர் ஐக்கிய இராச்சியத்தில் 1998 ஜூலை 10 ஆம் திகதி முறைப்படி பதிவுத் திருமணம் செய்தனர். இந்த வருடம் பெப்ரவரியில் சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்.
விஜய் 1984 ஆம் ஆண்டில் ” வெற்றி ” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகப் பிரவேசம் செய்தார். 1992 ஆம் ஆண்டில் தனது 18 வயதில் ” நாளைய தீர்ப்பு ” என்ற படத்தில் முதற்தடவையாக அவர் கதாநாயகனாக நடித்தார். அதற்குப் பிறகு அவர் 69 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை வசூலில் சாதனை படைத்தன. இன்று தமிழ்ச் சினிமாவில் அதிகூடிய சம்பளத்தைப் பெறும் நடிகராக விளங்கும் விஜய் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 200 கோடி இந்திய ரூபாவைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. தமிழ் நடிகர்களில் மிகப்பெரிய வசூல் சாதனையாளராக வும் அவர் விளங்குகிறார்.
திரைப்படங்களும் அரசியலும் திரைப்படத்துறை ஆளுமைகள் அரசியலில் பிரவேசித்து தங்களது சொந்தத்தில் கட்சிகளை அமைக்கும் நீண்டகாலப் பாரம்பரியம் ஒன்றைத் தமிழ்நாடு கொண்டிருக்கிறது. சிலர் மாநிலத்தின் முதலமைச்சர்களாகவும் கூட வந்திருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர்கள் சி.என். அண்ணாத்துரையும் மு.கருணாநிதியும் புகழ்பெற்ற திரைக்கதை வசனகர்த்தாக்கள்.
அரசியலில் பிரவேசித்த தமிழ் திரைப்பட நடிகர்களில் என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.), சிவாஜி கணேசன், எஸ். எஸ். இராஜேந்திரன், வி.என். ஜானகி, ஜெயலலிதா ஜெயராம், ரி.ஆர். இராஜேந்தர், எஸ்.வி. சேகர், நெப்போலியன், விஜயகாந்த், சீமான், சரத்குமார், ராதிகா, கமல் ஹாசன் மற்றும் உதயநிதி ஆகியோர் முக்மியமானவர்கள். தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் கூட சில திரைப்படங்களிலும் தெிலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
தங்களை அரசியல்வாதிகளாக மாற்றிக்கொண்ட தமிழ் திரைப்பட நடிகர்களின் நீண்டதொரு வரிசையில் விஜய் பிந்திய வரவாகும். அவர் ” தமிழக வெற்றிக் கழகம் ” என்ற தனது சொந்த அரசியல் கட்சியை 2024 பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பித்தார். தமிழ்நாடு பூராவும் உள்ள சுமார் 85,000 விஜய் இரசிகர் மன்றங்கள் கட்சிக் கிளைகளாக மாற்றப்பட்டன. தமிழக வெற்றிக் கழகம் பல இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக உரிமை கோருகிறது.
முன்னர் குறிப்பிட்டதைப் போன்று தமிழ்நாட்டு அரசியலில் பிரத்தியேகமான அம்சங்கள் இருக்கின்றன. திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சி தொடருவது ஒரு அம்சம். இரு பிராந்தியக் கட்சிகளான தி.மு.க.வும் அண்ணா தி.மு.க.வும் 1967 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டை மாறிமாறி ஆட்சிசெய்து வருகின்றன. அரசியல் அரங்கில் திரைப்படங்களும் திரை ஆளுமைகளும் செல்வாக்கைச் செலுத்திவருவது இரண்டாவது அம்சம்.
திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமும் அரசியலில் சினிமாவின் செல்வாக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விவகாரங்கள். ஒரு வகையில், திராவிட அரசியலின் எழுச்சியும் அரசியலில் சினிமாவின் செல்வாக்கு வளர்ச்சியும். ஒன்றுக்கு ஒன்று பரஸ்பரம் உதவியாக அமைந்த செயன்முறைகளாகும். விஜயைப் போன்ற முன்னணி நடிகர் ஒருவர் சொந்தத்தில் அரசியல் கட்சியொன்றைத் தொடங்கி தமிழ்நாட்டின் எதிர்கால முதலமைச்சராக வரமுடியும் என்று எதிர்பார்பபைக் கொண்டிருக்க முடிகிறது என்றால் மாநிலத்தில் நிலவும் ‘ சினிமா அரசியல் ‘ சூழ்நிலையே அதற்குப் பிரதான காரணமாகும்.
அதனால், தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகளின் எழுச்சி மாநில அரசியல் அரங்கில் சினிமாவின் செல்வாக்கு மேம்படுவதற்கு பெருமளவுக்கு உதவியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த பாரம்பரியத்தின் வழிவந்ததே நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம். ஆனால், விஜயும் அவரது தமிழக வெற்றிக் கழகமும் தி.மு.க.வையும் அண்ணா தி.மு.க. வையும் தங்களது அரசியல் எதிரிகளாகவும் பாரதிய ஜனதா கட்சியை தத்துவார்த்த எதிரியாகவும் கருதுகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு பிரதானமாக 35 வயதுக்கு குறைந்த இளைஞர்கள் மத்தியில் இருந்தே வருகிறது. பெண்களின் பெருமளவு ஆதரவும் இருக்கிறது. பிரதேசங்களைப் பொறுத்தவரை, கிராமப் புறங்களை விடவும் நகரப் பகுதிகளிலேயே விஜய்க்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது. மாநிலத்தின் தலைநகர் சென்னையிலும் ஏனைய நகரங்களிலும் தமிழக வெற்றிக் கழகம். தேர்தலில் சிறப்பாகச் செயற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு மட்டத்தில், வெள்ளாள சமூகம், பட்டியல் சாதிகள், மொழி, மத ரீதியான சிறுபான்மைச் சமூகங்களிடமிருந்து விஜய் கணிசமான ஆதரவைப் பெறுவார் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஒரு வெள்ளாளக் கிறிஸ்தவர். தி..மு.க.வும் அண்ணா தி.மு க.வும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணிகளை அமைத்திருக்கின்றன. ஆனால், வெற்றிபெற்ற பிறகு அவை தனிக்கட்சி நிருவாகம் ஒன்றையே அமைக்கின்றன. தேர்தல் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதில்லை. இது ஏனைய கட்சிகள் மத்தியில் அதிருப்தியின் விளைலான முணு முணுப்புகளுக்கு வழி வகுத்திருக்கிறது.
பதவிகள்
விஜய் தனது கட்சியைத் தொடங்கியபோது தன்னுடன் வந்து கூட்டுச்சேருமாறு மற்றைய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதாகாரத்திலும் ஆட்சிமுறையிலும் பங்கு தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். சுருக்கமாகச் சொல்வதானால், தேர்தல் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவிகள் தரப்படும் என்று அவர் அறிவித்தார். ஆளும் தி.மு.க.வைத் தவிர மற்றைய அரசியல் கட்சிகளுடன் பரபரப்பில்லாமல் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. தி.மு.க.வுக்கு மாற்றாக தனது கட்சியை விஜய் நோக்கியதே இதற்கு காரணம். அமைச்சர் பதவிகள்வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட போதிலும் கூட, விஜயுடன் இணைவதற்கு தமிழ்நாட்டின் எந்த கட்சியும் முன்வ ரவில்லை.
இதற்கு இரு காரணங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. பரீட்சித்துப் பார்க்கப்படாத புதியதொரு கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு அரசியல் கட்சிகள் முன்வரவில்லை என்பது ஒரு காரணம். தான் மாத்திரமே முதலமைச்சர். பதவிக்கு உரியவர் என்று விஜய் வலியுறுத்தியது இரண்டாவது காரணம். கூட்டுச் சேருவதற்கு எந்த கட்சியும் கிடைக்காத நிலையில் தவிர்க்கமுடியாமல் விஜய் தேர்தலில் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்று அறிவித்தார்.
அடுத்த முதலமைச்சராக தங்கள் தலைவரை விஜயின் ஆதரவாளர்கள் முன்னிலைப்படுத்தி பிரசாரங்களைச் செய்தபோதிலும், பல அரசியல் ஆய்வாளர்கள் அதில் சந்தேகம். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பத்துக்கும் இருபதுக்கும் இடைப்பட்ட சதவீத வாக்குகளைப் பெற்று நகரப்பகுதிகளில் சொற்ப ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டு அரசியலில் விஜயை முக்கியமான ஒருவராக்கும், ஆனால் வெற்றியாளராக அவரால் வரமுடியாது. தமிழக வெற்றிக் கழகம் பெறப்போகும் வாக்குகள் தேர்தலின் ஒட்டுமொத்த முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி தீர்மானிக்கும் காரணியாக அமையக்கூடும். பெரும்பாலும் மாநிலத்தில். உள்ள ஒவ்வொரு கட்சியிலும் இருந்து இளைஞர்களையும் பெண்களையும் விஜயின் கட்சி கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத் தகராறு
இந்த தேர்தல் கணிப்பீடுகள் எவ்வாறாக இருந்தாலும், எதிர்பாராத வகையில் ஏற்பட்ட திருப்பங்கள் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன. விஜய் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விவகாரம் ஒன்று பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இந்த தனிப்பட்ட விவகாரம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் ” குடும்பத் தகராறு ” குறித்தும் சற்று ஆராயவேண்டியது அவசியமாகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று விஜயின் மனைவி சங்கீதா இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் பிரஜை. இருவரும் பிரிந்து வாழப் போகிறார்கள் என்று அண்மைக்காலமாக வதந்திகளும் ” கிசுகிசுக்களும் ” உலாவின. விஜய்க்கும் இன்னொரு நடிகைக்கும் இடையில் உறவு இருப்பதாகக் கூறப்பட்டது.
விவாகரத்து மனு
விவாகரத்துக் கோரி சங்கீதா 2026 பெப்ரவரியில் வழக்கைத் தாக்கல் செய்ததையடுத்து இருவருக்கும் இடையிலான மனமுறிவு வதந்தியல்ல உண்மை என்று நிரூபணமானது. 2026 பெப்ரவரி 27 ‘ இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘ பினவருமாறு செய்தி வெளியிட்டது.
” நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்க்கும் ( ஜோசப் விஜய் சந்திரசேகர் ) சங்கீதா விஜய்க்கும் இடையிலான திருமணத்தில் விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
” திருமணம் முதலில் 1998 ஜூலை 10 ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்டது. பிறகு வைபவரீதியான திருமணம் இந்து முறைப்படி 1999 ஆகஸ்ட் 25. சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது என்று சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
” திருமணத்தின் ஆரம்ப வருடங்கள் மிகவும் சுமுகமானதாகவும் இணக்கபூர்வமானதாகவும் இருந்தது. மனுதாரர் குடும்பத்துக்காக தன்னை அரப்பணித்து பிள்ளைகளை வளர்த்துவந்தார். ஆனால், விஜய்க்கு நடிகை ஒருவருடன் தகாத உறவு இருந்ததை 2021 ஏப்ரிலில் கண்டுபிடித்த சங்கீதா பெரும் வேதனைக்கும் மனக்குழப்பத்துக்கும் ஆளானார். தாம்பத்திய நம்பிக்கைக்கு விஜய் துரோகமிழத்துவிட்டதாக அவர் கவலைப்பட்டார்.
” அந்த தகாத உறவை நிறுத்திவிடுவதாக ஆரம்பத்தில் விஜய் உறுதிளித்த போதிலும், அது தொடரவே செய்தது. சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் மனுதாரருக்கு பொதுவெளியில் அவமானத்தை ஏற்படுத்தியது. முதலில் 2021 செப்டெம்பருக்கும் 2022 பெப்ரவரிக்கும் இடையிலும் பிறகு 2024 ஆகஸ்டுக்கும் 2025 பெப்ரவரிக்கும் இடையிலும் ஆலோசனைகள் மற்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இணக்கபூர்வமான முடிவொனறைக் கொண்டுவரத் தவறின.
” மீட்கமுடியாத அளவுக்கு திருமணம் முறிவடைந்து விட்டது என்றும் அது ஆவணத்தில் மாத்திரமே தொடருகிறது என்றும் வரணித்த மனுதாரர் விவாகரத்தைக் கோருவதுடன் பிரதிவாதியின் வருமானத்துக்கும் சமூக மதிப்புக்கும் ஏற்ற முறையில் நிரந்தரமான ஜீவனாம்சத்தை தரவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளினதும் கண்ணியத்தையும் அந்தரங்கத்தையும் வழக்கு முடிவடையும் வரை நீலாங்கரையில் உள்ள மணவாழ்வு மனையில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் அல்லது அதையொத்த வீடொன்றில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்துதரப்பட வேண்டும் என்றும் கோருகிறார் என்று மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
சங்கீதா மீது தாக்குதல் ஆலோசனைகள் மற்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இணக்கபூர்வமான முடிவொனறைக் கொண்டுவரத் தவறின. ” மீட்கமுடியாத அளவுக்கு திருமணம் முறிவடைந்து விட்டது என்றும் அது ஆவணத்தில் மாத்திரமே தொடருகிறது என்றும் வரணித்த மனுதாரர் விவாகரத்தைக் கோருவதுடன் பிரதிவாதியின் வருமானத்துக்கும் சமூக மதிப்புக்கும் ஏற்ற முறையில் நிரந்தரமான ஜீவனாம்சத்தை தரவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளினதும் கண்ணியத்தையும் அந்தரங்கத்தையும் வழக்கு முடிவடையும் வரை நீலாங்கரையில் உள்ள மணவாழ்வு மனையில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் அல்லது அதையொத்த வீடொன்றில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்துதரப்பட வேண்டும் என்றும் கோருகிறார் என்று மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
சங்கீதா மீது தாக்குதல்
சங்கீதா விவாகரத்துக் கோரும் தகவல் ஊடகங்களின் மூலமாக பொதுவெளியில் தெரிய வந்தபோது விஜயும் அவரது கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் மௌனம் சாதித்தார்கள்.ஆனால், விஜயின் ஆதரவாளர் அடிப்பொடிகள் சமூக ஊடகங்களில் பதிவுகள் மூலமாக சங்கீதாவை ஈவிரக்கமின்றித் தாக்கினார்கள். ” பண்புக்குன்று ” விஜய்க்கு எதிராக சங்கீதா போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் தி.மு.க.வின் பொம்மையாகச் செயற்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். விஜயின் தேர்தல் வாய்ப்புக்களை பாழடிப்பதற்காக தி.மு.க.வினால் தீட்டப்பட்ட சதித்திட்டமே விவாகரத்து விவகாரம் என்று அவர்கள் கூறினார்கள்.
சங்கீதாவுக்கு எதிரான பிரசாரங்களை கண்டித்து இந்தியாவில் உள்ள பிரபல்யமான பெண்கள் அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்ட அளவுக்கு அவர் மீதான தாக்குதல்கள் கொடூரமானவையாகவும் ஆபாசமானவையாகவும் இருந்தன. தனது 27 வருடகால மனைவியும் இரு பிள்ளைகளின் தாயாருமான சங்கீதா படுமோசமாக தாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது விஜய் மௌனம் காத்தார். தனது அடிவருடிகளைக் தடுத்து நிறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ அவர் முயற்சிக்கவில்லை.
இடைக்கால மனு
இதைத் தொடர்ந்து விவாகரத்து வழக்கு விசாரணை செய்யப்படவிருப்பதற்கு முன்னதாக சங்கீதா மார்ச் முதல் வாரத்தில் ஜீவனாம்சத்தையும் வீட்டுரிமையையும் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றைத் தாக்கல் செய்தார். விவாகரத்து வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை உகந்த ஜீவனாம்சத்தை தனக்கு கொடுக்க வேண்டும் என்று விஜய்க்கு உத்தரவிடுமாறு அந்த மனுவில் சங்கீதா வேண்டிக்கொண்டதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறின. இதற்கு மேலதிகமாக, செனைனை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் தங்கியிருப்பதற்கான உரிமையையும் கோரினார்.இடைக்கால உத்தரவொன்றின் ஊடாக நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் அமைந்திருக்கும் வீட்டில் தங்கியிருப்பதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தைச் சங்கீதா வேண்டிக் கொண்டார்.
திரிஷா கிருஷ்ணன்
விவாகரத்து மனுவில் சங்கீதா தனது கணவருக்கு இன்னொரு நடிகையுடன் தகாத உறவு இருப்பதாக குறிப்பிட்டாரே தவிர அந்த நடிகையின் பெயரைக் குறிப்பிடுவதையோ அல்லது வழக்கில் மூன்றாவது தரப்பாக குறிப்பிடுவதையோ தவிர்த்துக்கொண்டார்.ஆனால், விசித்திரமான ஒரு திருப்பமாக திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு விஜய் நடிகை திரிஷா கிருஷ்ணனுடன் ஒரே வாகனத்தில் ஒன்றாகப் பயணம் செய்தார். விஜய் அணிந்திருந்த வேட்டி சட்டையின். நிறமும் திரரிஷாவின் சாறியின் நிறமும் ஒன்றாக இருந்தன.
இந்த துணிச்சலான செயல் மூலமாக பொதுவில் உலகிற்கும் குறிப்பாக சங்கீதாவுக்கும் ஒரு செய்தியைத் தெரிவிக்க விஜயும் திரிஷாவும் விரும்பினார்கள் போலும். இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்தடவையாக சினிமா உலகைச் சேர்ந்த பலர் விஜயைக் கண்டனம் செய்தனர். விஜயின் ஆதரவாளர்கள் மற்றும. அவரை நியாயப்படுத்திப் பேசுபவர்களில் பலர் வாயடைத்துப்போன அதேவேளை, ஒரு சிலர் பகிரங்கமாக கண்டிக்கவும் செய்தனர். சங்கீதா மீதான விஜய் ஆதரவாளர்களின் தாக்குதல்கள் உத்வேகத்தை இழந்து. கடுமையாகக் குறையத் தொடங்கின.
சட்டபூர்வ மனைவி
தமிழ்நாட்டில் படிப்பறிவுடையவர்களின் வீதமும் கைத்தொழில்மய மட்டமும் உயர்வானதாக இருக்கின்ற போதிலும், மக்கள் பழக்க வழக்கங்களிலும் பண்புகளிலும் அடிப்படையில் பழமைவாதச் சிந்நனையைக் கொண்டர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும், முக்கியமான பல அரசியல்வாதிகளும் பிரபலமான திரைப்பட நடிகர்களும். ஒன்றுக்கு மேற்றபட்ட ” மனைவியரைக் ” கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதை இந்த முதலாவது அல்லது சட்டபூர்வ மனைவிமார் பகிரங்கமாக குறைகூறுவதோ அல்லது விவாகரத்துக் கோருவதோ இல்லை. சங்கீதா விஜயிடமிருந்து கோரிய விவாகரத்து இந்த வழமைக்கு மாறாக இருந்தது. சங்கீதா இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் எனபதை மறந்து விடக்கூடாது.
தேர்தலில் தினத்தன்று வாக்களிக்கும்போது தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக,பெண்கள் விஜயின் இந்த நடத்தைக்கு எவ்வாறு தங்களது பிரதிபலிப்பை வெளிப்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதேவேளை, விஜயும் சங்கீதாவும் ஆரம்ப விசாரணைக்காக ஏப்ரில் 20 நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு மூன்று நாட்கள் கழித்து ஏப்ரில் 23 தமிழ்நாட்டு மக்கள் சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள்.
- Kokuvil Junction


