மாறும் அரசியல் களம் தமிழகத்தின் புதிய அதிகார போட்டி!
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
MGR -ஐ விஞ்சிய விஜய்
1977-ல் எம்.ஜி.ஆர் தான் போட்டியிட்ட முதல் தேர்தலில் 33.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேபோல், தற்போதைய சட்டசபை தேர்தலில் விஜய் 34.8 சதவீத வாக்குகளைப் பெற்று எம்.ஜி.ஆர்-ன் அந்த சாதனையை முறியடித்திருக்கிறார். எனினும், தற்போது தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கக்கூடும்.
தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது
இரவு 7 மணி நிலவரப்படி, தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது. தனிப்பெரும் கட்சியான விஜய்யின் தி.வ.க. 108 தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும் அல்லது வெற்றி பெற்றிருந்தாலும், 118 இடங்கள் என்ற பெரும்பான்மை இலக்கை அடைய இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. திமுக கூட்டணியும், அதிமுக-தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முறையே 75 மற்றும் 51 இடங்களைப் (வெற்றி மற்றும் முன்னிலை) பெற்று வெகுதூரம் பின்தங்கியுள்ளன. தற்போது, முடிவெடுக்கும் சக்தியாகச் செயல்படக்கூடிய சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.
விஜய்க்கு வாழ்த்து கூறிய ராகுல் காந்தி
தமிழகத்தில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி மூலமாக வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.
விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி
விருத்தாசலத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். தன்னை வெற்றி பெறவைத்த வேட்பாளர்களுக்கு தனது நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றி சான்றிதழை பெற லயோலா கல்லூரி செல்லும் விஜய்
TVK விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இதில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறுவதற்காக விஜய் தற்போது லயோலா கல்லூரி செல்கிறார்.
கொளத்தூரில் 8,795 வாக்குகள் வித்தியாசம்
கொளத்தூரில் மொத்தம் 22 கட்டம் நடந்த வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
TVK உடன் கூட்டணி குறித்து சூசகமாக தெரிவித்த காங்கிரஸ்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஒரு கூட்டணி உருவாகி வருவதை பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளார். சோடங்கர் கூறுகையில், "தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் டிவிகே-வை நோக்கி நகர்ந்துள்ளனர், அதனால்தான் டிவிகே இவ்வளவு பெரிய ஆதரவைப் பெறுகிறது. நான் ஏற்கனவே நமது காங்கிரஸ் தலைவர் கார்கே ஜி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஜி மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளர் வேணுகோபால் ஜி ஆகியோருக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளேன்," என்றார். சூசகமாக காங்கிரஸ் TVK உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதை இது உணர்த்துகிறது.


