ஈரானின் எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நுழைவு: டொனால்ட் டிரம்ப்..!
வெறும் 3 நிமிடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை அழிக்கும் வல்லமை அமெரிக்காவிற்கு உண்டு டிரம்ப்..!
ஈரானின் எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நுழைவு: டொனால்ட் டிரம்ப்..!
வாஷிங்டன்: ஈரானின் கடுமையான மிரட்டல்களுக்கு மத்தியிலும், அமெரிக்காவின் அதிநவீன போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நேற்று இரண்டு அதிநவீன போர்க்கப்பல்களை ஜலசந்தியின் மையப்பகுதிக்கு அனுப்பினோம். ஈரான் தரப்பிலிருந்து எவ்வித எதிர்ப்பும் கிளம்பவில்லை," என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் (CENTCOM) தகவல்படி, 'யு.எஸ்.எஸ் பிராங்க் இ. பீட்டர்சன்' (USS Frank E. Petersen Jr) மற்றும் 'யு.எஸ்.எஸ் மைக்கேல் மர்பி' (USS Michael Murphy) ஆகிய இரண்டு ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெறும் 3 நிமிடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை அழிக்கும் வல்லமை அமெரிக்காவிற்கு உண்டு என அவர் எச்சரித்துள்ளார்.


