Breaking News
ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது!
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 07 ஆம் நாள் அகழ்வுகள்!
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (04) ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அடையாளம் காணப்பட்ட 4 எலும்புகள் அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அப்புதைகுழியில் மொத்தமாக அடையளாம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.


