நாளை காலை 10 மணிக்கு, நாம் ஒரு தடையை அமுல்படுத்த போகிறோம்
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
நாளை காலை 10 மணிக்கு, நாம் ஒரு தடையை அமுல்படுத்த போகிறோம்- ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்னர் கூறியிருந்த நிலையில், மேரிலாந்தில் உள்ள Joint Base ஆண்ட்ரியூஸ் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,
"நாளை காலை 10 மணிக்கு, நாம் ஒரு தடையை (blockade) அமுல்படுத்தப் போகிறோம் அதாவது நாளை காலை 10 மணிக்கே அது ஆரம்பமாகும். இதனால், ஈரான் எண்ணெயை விற்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்தையடுத்து அமெரிக்காவின் CENTCOM, X தகவல்படி, ஏப்ரல் 13 காலை 10 மணி (ET) முதல். ஈரான் துறைமுகங்களுக்கு உள்ளே செல்லும் மற்றும் வெளியே வரும்
அனைத்து கடல் போக்குவரத்துக்கும் தடையை அமுல்படுத்தத் தொடங்கும். இந்தத் தடையை, எந்த நாட்டைச் சேர்ந்த கப்பல்களாக இருந்தாலும், ஈரான் துறைமுகங்களுக்கும் கடற்கரைப் பகுதிகளுக்கும். செல்லும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து கப்பல்களுக்கும். சமமாகப் பயன்படுத்தப்படும்.
இதில், அரேபியக் கடல் வளைகுடா (Arabian Gulf) மற்றும் ஓமான் வளைகுடா (Gulf of Oman) பகுதிகளில் உள்ள. ஈரானின் அனைத்து துறைமுகங்களும் அடங்கும். ஆனால், Hormuz வழியாக. ஈரான் அல்லாத (other countries) துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களின் சுதந்திரமான பயணத்தை தடை செய்யாது என
(CENTCOM) அமெரிக்கா இராணுவ கட்டளை மையம் தெரிவித்துள்ளது.


