ஈரானுடன் நடைபெறும் போரில் அடுத்த சில நாட்கள் மிகவும் தீர்மானிக்கும் நாட்கள் ஆக இருக்கும் - Pete Hegseth
கடந்த 24 மணி நேரத்தில் 200 நேரடித் தாக்குதல்கள்
ஈரானுடன் நடைபெறும் போரில் அடுத்த சில நாட்கள் மிகவும் தீர்மானிக்கும் நாட்கள் ஆக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதல் திறன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஈரானின் திறன் குறைந்து வருகிறது. நம்மிடம் மேலும் மேலும் வாய்ப்புகள் உள்ளன, அவர்களிடம் குறைவாகவே உள்ளன.
நமது தாக்குதல்கள் ஈரானிய இராணுவத்தின் மன உறுதியைக் குலைத்து, பரவலான தப்பியோடல்களுக்கும், முக்கிய பணியாளர் பற்றாக்குறைக்கும் வழிவகுத்து, மூத்த தலைவர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு தெஹ்ரான் மீது குண்டுகளை வீசியதாக அவர் வெளிப்படுத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் 200 நேரடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இது போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் மிகக் குறைந்த ஏவுகணைத் தாக்குதல் விகிதம் என்றும், மேலும் ஒரு ஐ.ஆர்.ஜி.சி கட்டளைப் பதுங்குகுழி அழிக்கப்பட்டதாகவும் அவர் அறிவித்தார். ஈரானிடம் "இராணுவ ரீதியாகச் செயற்படுவதற்கு கிட்டத்தட்ட எதுவும் இல்லை" என்றும் அவர் கூறினார்.


