அவன் இயங்கவில்லை…இயக்கப்படுகின்றான் - சட்டத்தரணி சுகாஸ்
மக்களின் உளவியலறிந்து அரசியல் வியாபாரம் செய்ய வந்த வியாபாரி - அவன்!
அவன் பைத்தியமில்லை! நிச்சயமாக முட்டாளுமில்லை! மக்களின் உளவியலறிந்து அரசியல் வியாபாரம் செய்ய வந்த வியாபாரி - விபச்சாரி அவன்! மாகாண சபைத் தேர்தலுக்கு இப்பவே கதை எழுதத் தொடங்கிவிட்டான்.
அவன் இயங்கவில்லை…இயக்கப்படுகின்றான்.
எதற்காக?
மிஞ்சியிருக்கும் இனத்தின் எதிர்காலத்தைச் சூனியமாக்க.இனப்படுகொலைக்கான நீதியை இல்லாமலாக்க.அவன் வென்றுவிட்டான்.
எப்படி?
எம்மினத்தையே கோமாளிகளாகப் பார்க்க வைத்துவிட்டான். தமிழரின் தரம், தராதரம் இதுதான் என்று உலகுக்குக் காட்டிவிட்டான். பெண்களோடு சுற்றுவதும், அன்ரிகளோடு அளவளாவுவதும், தூசணங்கள் பேசுவதும் , போதையிலே பீற்றுவதும்தான் அரசியலுக்கான அடிப்படைகள் என்று எதிர்காலத் தலைமுறைக்குத் தவறான வகுப்பெடுத்துவிட்டான்!
உயரிய சபையில் அநாகரிகமாக, அவதூறூக, அரியண்டமாகப் பேசுகின்றான்! குறைந்தபட்சம் ஒழுக்காற்று விசாரணைகூட நடாத்தப்படவில்லை.
ஏன் நடாத்தப்படவில்லை?
அவர்களுக்கு வேண்டியதும் அதுதானே! அப்பதானே சர்வதேச விசாரணை கேட்ட இனம் நாளைக்குத் தறிகெட்டுத் திரியும். எழுதிவையுங்கள்! அவனின் நாடகம் இன்னும் முடியவில்லை. உங்களின் உளவியலறிந்து ஏமாற்றும் பாங்கறிந்து மாகாண சபைக்கும் உங்கள் முன் வருவான்! ஆனால் அடுத்த பாராளுமன்றுக்கு வரமாட்டான்! பணப்பெட்டியோடு ஐரோப்பிய நாடொன்றுக்குக் குடிபெயர்வான் “வைரத்தோடு”.
சிந்தியுங்கள்!
அல்லது இனத்தின் எஞ்சியிருக்கும் கோமணமும் கழன்றுவிடும்! அண்ணன் சீமான் எங்களின் சொந்தம்! அரசியல் கடந்த தமிழ்த் தேசியப் பந்தம்! முடிந்தால் சீமானைத் தொட்டுப்பார்!என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.


