Breaking News
மே 18 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மர நடுகை!
.
மே 18 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மர நடுகை
முள்ளிவாய்க்கால் படுகொலை 17 வது ஆண்டு நினைவேந்தலை( மே 18 ) முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மரநடுகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. மாணிக்கவாசகர் இளம்பிறையன், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


